மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் - மனோ கணேசன் எம்.பி

09 Sep, 2026 | 12:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அது முற்றிலும் தவறானது. கடந்த காலங்களில் இந்திய அரசுடன் கலந்துரையாடி 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டோம். காணி டில்லியில் இருந்து வராது. இலங்கையில் தான் காணியை வழங்க வேண்டும்.

பெருந்தோட்ட மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள். அதனை விடுத்து கடந்த காலத்தை விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி வேளையின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

 தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இந்நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள எமது மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைக்கிறேன்.

 கடந்த அரசாங்கங்களினால் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுப்படுத்தாத வீடுகள் இந்த காலப்பகுதிக்குள் முழுமையாக புனரமைக்கப்பட்டு,பயனாளர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதா, அவ்வாறாயின் அதன் எண்ணிக்கை எத்தனை?

 அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை? தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி ஒதுக்கீட்டு பயனாளிகளின் எண்ணிக்கை எத்தனை ?

 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மலையக அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? சட்டத்தால் உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபையை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதா ?

இந்திய அரசின் ஒத்துழைப்புடன் முன்மொழியப்பட்ட 10000 வீட்டுத்திட்டத்தில் இன்றளவில் எத்தனை வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன? கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதியன்று மலையகத்தில் 2000 பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தின் சட்டபூர்வ அந்தஸ்த்து என்ன ?

டித்வா தாக்கத்தை தொடர்ந்து மலையகத்தில் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை அமைக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளதா? 2025 ஆம் ஆண்டுக்குள் 6000 வீடுகளை நிர்மாணிப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு குறிப்பிட்டார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை.

கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அது முற்றிலும் தவறானது.கடந்த காலங்களில் இந்திய அரசுடன் கலந்துரையாடி 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம். காணி டில்லியில் இருந்து வராது. இங்கு தான் காணியை வழங்க வேண்டும்.

பெருந்தோட்ட மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள். அதனை விடுத்து கடந்த காலத்தை விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40