பிரித்தானியாவின் தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளின் விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானியங்கி விமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15-க்கும் மேற்பட்ட பிரித்தானிய விமான நிலையங்களில் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்னும் நீடிப்பதால் பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
திடீர் விமான இரத்துகள் மற்றும் தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களிலும், ஓடுதளங்களில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களுக்குள்ளும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை இரத்து செய்ய அல்லது மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
அதேவேளை, ரையான்ஏர் நிறுவனத்தின் 50-க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 65,000-க்கும் அதிகமான பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஐரோப்பா முழுவதும் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஈஸிஜெட் தெரிவித்துள்ளது.
ஹீத்ரோ, ஸ்டான்ஸ்டெட், இலண்டன் சிட்டி, மான்செஸ்டர், பர்மிங்ஹாம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும், ஸ்காட்லாந்தின் சில விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானப் பயண அட்டவணைகள் மாற்றமடைந்துள்ள நிலையில், பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM