நர­கா­சுரன் என்ற அரக்­கனை ஸ்ரீகி­ருஷ்ண பகவான் வதம் செய்து இந்த உலக மக்­களை காத்­த­ரு­ளிய நாளை நாம் தீப­மேற்றி தீபா­வ­ளி­யாக கொண்­டாடி வரு­கிறோம் என்­கி­றது நமது ஆன்­மி­கக்­கதை. உள்­ளத்து தீமையை சுட்­டெரி 'தீ' என்ற அறிவை பயன்­ப­டுத்தி தீமையை விரட்டி குறை­வில்லா செல்­வத்தை இல்­லங்­க­ளுக்கு கொண்டு வரும் நன்­னா­ளா­கவும் தீபா­வளி கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

கட­வுளின் அருஞ்­செ­ய­லுக்­கா­கவும், கடவுள் அருள் வேண்­டியும் இன்று பண்­டி­கைகள் கொண்­டா­டப்­ப­டு­கின்­றன. அந்த பண்­டி­கைகள் ஒவ்­வொன்­றிற்கும் ஆன்­மிகப் பின்­புலம், வர­லாற்றுப் பின்­னணி நிச்­சயம் உண்டு. தீமையை வெற்றி கொள்ளும் ஒளித்­தி­ரு­நா­ளாக தீபா­வளிப் பண்­டிகை கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இந்த இனிய தீபா­வளிப் பண்­டிகை பற்றி இன்­றைய இளைய சமு­தாயம் வர­லாற்று பின்­ன­ணி­யுடன் தெரிந்து கொள்­ளவே இந்த தீபமும்...!! தீபா­வ­ளியும்...!!!

சிவனின் ஆயுதம் 'தீ' : நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ  பஞ்ச பூதங்­களால் ஆன இந்த பரந்த உலகில் வாழும் எல்லா ஜீவ­ரா­சி­க­ளுக்கும் ஒரு வர­லாறு உண்டு . இந்த பஞ்ச பூதங்­களை கண்டு மனிதன் பயந்­த­போது, அவை சக்தி மிக்­க­தாக கரு­தப்­பட்டு வணங்­கப்­பட்­டன. பஞ்­ச­பூ­தங்­களில் முக்­கி­ய­மாக 'தீ' மிகவும் சக்­தி­மிக்­க­தாக வணங்­கப்­பட்டு கடவுள் நிலைக்கு உயர்ந்­தது. அழிக்கும் கட­வு­ளான சிவனின் ஆயுதம் 'தீ' என்­பதால் 'தீ' என்ற சொல் இன்று பெரும்­பாலும் அழிவின் குறி­யீ­டாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

 உண்­மையில் 'தீ' என்றால் 'அறிவு' மற்றும் 'இனிமை' என்று பொருள். சிவனின் நெற்றிக் கண்­ணி­லி­ருந்து பிறக்கும் 'தீ' தீமையை அழித்து நன்­மையை நிலை நிறுத்தி மக்­க­ளுக்கு வழி­காட்­டு­கி­றது. எனவே தான் 'தீ' என்ற சொல்­லுக்கு 'உபாய வழி' என்று பொருள் கொள்­ளப்­ப­டு­வ­தாக ஆன்­மிக பெரி­யோர்கள் கூறு­கின்­றனர். அவர்கள் கூற்­றுப்­படி சிவன், தன் நெற்­றிக்கண் தீப்­பொறி மூலம் தீமையை அழிக்கும் ஒவ்­வொரு நிகழ்வும் மனித குலத்­திற்­கான தீபா­வ­ளியே. 'தீ' என்ற ஒளியின் தோற்­றமே காடு­களில் கால்­ந­டை­க­ளாக ஓடிக்­கொண்­டி­ருந்த மனி­தர்­களை ஓரி­டத்தில் நிலை­யாக அமர வைத்­தது. எனவே, கூட்­ட­மாக வாழும் கூட்டுக் குடும்­பத்­திற்கு முதல் அச்­சா­ர­மிட்­டது 'தீ'.

ஆதி மனி­தனும் தீயும் : மனிதன் தீயை கண்­ட­றியா விட்டால் இன்­றைய மனித சரித்­திரம் வேறொன்­றா­யி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. பூமியின் அற்­புதப் படைப்பே 'தீ' என்­கி­றது யவன புராணம். தீயின் மூல­மாக வெளிச்­சத்தைக் கண்ட ஆதி­ம­னிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர, கொடிய மிரு­கங்­க­ளிடம் இருந்து தன்னை பாது­காத்துக் கொள்ள தீயை பயன்­ப­டுத்­தினான். தன்னை தாக்கும் கொடிய மிரு­கங்­களை தீயின் உத­வி­யுடன் விரட்­டி­ய­டித்து வெற்றி கொண்­ட­போது கையில் தீயை வைத்து எக்­கா­ள­மு­ழக்­க­மிட்டு, அந்­நி­கழ்வை கூட்­ட­மாக கொண்­டா­டினர். தங்­க­ளுக்கு தீமை செய்ய வரும் கொடிய மிரு­கங்­களை 'தீ' உத­வி­யுடன் விரட்டி நன்­மை­ய­டைந்த ஒவ்­வொரு நிகழ்­வு­களும் ஆதி­ம­னி­த­னுக்கு தீபா­வ­ளியே.

வேள்­வியில் அடங்­கிய தீ : தீயினால் நாடோடி வாழ்க்­கையை கைவிட்ட மனிதன் நிலை­யான இருப்­பி­டத்தை அமைத்தான். ஆதி­கா­லத்தில் நினைத்­த­வுடன் தீயை உரு­வாக்க இய­லாது. எனவே, ஒவ்­வொரு வீட்­டிலும் 'தீ' எப்­போதும் இருக்க வேண்டும் என்று கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது. புயல், மழை, காற்று, பனி, என அனைத்து பருவ காலங்­க­ளிலும் எப்­பொ­ழுதும் கனன்று கொண்­டி­ருக்கும் வகையில் 'தீ' பாது­காக்­கப்­பட்­டது. இதன் மூலம் தீயை அடக்­கி­யாளப் பழ­கிய மனிதன் தீயை சிறு சிறு பொறி­யாக மாற்றி தீக்­குண்­டங்­களில், அதா­வது வேள்­வியில் நிலை நிறுத்­தினான். இதுவே பின்­னாளில் சிறு ஒளி­யாக தீப­மாக மாறி­யது.

தீயை காக்கும் மனிதன் : மனிதன் உயிர் வாழவும், உயிரை பாது­காக்­கவும் பயன்­பட்­டதால் 'தீ' புனி­த­மாக்­கப்­பட்­டது. தீயும், தீயுள்ள இடங்­களும் பின்­னாளில் புனி­த­மான இடங்­க­ளா­யின. இரவு நேரங்­களில் வரும் பாதிப்­புக்­களை தவிர்க்க தீபங்­களை ஏற்­றினர். அதனால் கிடைத்த நன்­மை­களை அவ்­வப்­போது கொண்­டாடி மகிழ்ந்­தனர். இன்றும் மாலை நேரத்தில் வீடு­களில் தீப­மேற்றி செல்­வத்தின் அதி­பதி லட்­சு­மியை வர­வேற்கும் முறை உள்­ளது. எனவே, ஆதி­கா­லத்தில் இருந்து இன்று வரை தீ மற்றும் தீப ஒளியை பாது­காக்­கவே மனித சமூகம் அதிகம் போராடி வரு­கி­றது என்­பது தெளிவு.

'தீபா­வளி' : இறை­வ­னுடன் ஒளியை தொடர்பு படுத்தி வணங்க ஆரம்­பித்த பின் யாகம், வேள்வி, நிகழ்த்­து­வதில் 'தீ' வணங்­கப்­பட்­டது. மனிதன் மன­தி­லுள்ள இருள் எனும் தீமையை போக்க தீப ஒளியில் இறை­வனை வணங்­கினான். தீமை விலகி நன்­மையை உணர்ந்த வேளையில் 'தீ' மற்றும் தீபம்' இரண்டும் இணைந்து 'தீபா­வளி' என்ற ஜோதி நாளாக கொண்­டா­டப்­பட்­டது. ஆம், 'தீபா­வளி' என்றால் 'தீப­வ­ரிசை' என்று பொருள்.

நர­கா­சுரன் என்ற அரக்­கனை ஸ்ரீகிருஷ்ண பகவான் வதம் செய்து இந்த உலக மக்­களை காத்­த­ரு­ளிய நாளை நாம் தீப­மேற்றி தீபா­வ­ளி­யாக கொண்­டாடி வரு­கிறோம் என்­கி­றது நமது ஆன்­மி­கக்­கதை. உள்­ளத்து தீமையை சுட்­டெரி 'தீ' என்ற அறிவை பயன்­ப­டுத்தி தீமையை விரட்டி குறைவில்லா செல்வத்தை இல்லங்களுக்கு கொண்டு வரும் நன்னாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்னும் பல கதைகள், பல விளக்கங்கள் தீபாவளி பண்டிகை பற்றி இருந்தாலும், மனிதனின் உள்ளத்தில் இருக்கும் தீமையை, அகங்காரத்தை, ஆணவத்தை 'தீ' என்ற அறிவால் பொசுக்கும் பண்டிகை என்பதை உணர்ந்து மனிதகுலம் சுபீட்சமாக வாழ தீப ஒளியேற்றி கடவுளை வணங்குவோம் இத்தீபாவளி நன்னாளில்!

என்.கே. அபிஷேக்பரன்