இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அச்சம்

Published By: Vishnu

09 Sep, 2026 | 05:09 AM
image

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலாகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட சில விவசாயப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (08)இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதனால் அதனூடாக பயணிக்கும் பாதசாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

வயல் நிலங்களில் காணப்படும் களைகள் மற்றும் விவசாயக் கழிவுகளை அகற்றும் நோக்கில் சிலர் தீ மூட்டுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கட்டுப்பாடின்றி பரவும் தீ காரணமாக அருகிலுள்ள விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் தீ மூட்டப்படுவதால், தீ பரவும் திசையை உடனடியாக அவதானித்து கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வறட்சியான காலநிலை நிலவி வரும் நிலையில் வயல் பகுதிகளில் தீ மூட்டப்படுவது தீ வேகமாக பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, வயல் நிலங்களுக்கு தீ மூட்டும் நடவடிக்கைகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும், தீயை கட்டுப்பாடின்றி விட்டுச் செல்லாமல் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடு முழுவதும் பொலிஸ் விசேட நடவடிக்கை...

2026-10-10 17:12:39
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01