உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி ஆஜரான 8 பிரதிவாதிகள் எழுத்துமூல வாதங்களை கையளிப்பு

Published By: Vishnu

09 Sep, 2026 | 04:48 AM
image

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சட்டத்தரணிகளின் ஆதரவின்றி நீதிமன்றத்தில் தாமாகவே முன்னிலையான 8 பிரதிவாதிகள், தமது தரப்பு நியாயங்கள் அடங்கிய எழுத்துமூல வாதங்களை செவ்வாய்க்கிழமை (8) கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் சமர்ப்பித்துள்ளனர்.

நவரத்ன மாரசிங்க தலைமையில், ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷ்ஷங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (8) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல வாதங்களில் 7 பிரதிவாதிகள் ஆங்கில மொழியில் கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட 376 பக்கங்களைக் கொண்ட எழுத்துமூல வாதங்களை சமர்ப்பித்ததுடன், 11 ஆவது பிரதிவாதி மாத்திரம் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்ட 28 பக்கங்களைக் கொண்ட எழுத்துமூல வாதத்தைச் சமர்ப்பித்தார். குறித்த 8 பிரதிவாதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு எழுத்துமூல ஆட்சேபனைகளையும் வாதங்களையும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 ஆவது பிரதிவாதி மாத்திரம் எவ்வித எழுத்துமூல ஆட்சேபனைகளையும் மன்றில் சமர்ப்பிக்கவில்லை. ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் முறைப்பாட்டு தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் தமது எழுத்துமூல வாதங்களை புதன்கிழமை (9) நண்பகல் 12 மணிக்கு முன்னர் மேல் நீதிமன்றப் பதிவாளரிடம் கையளிக்குமாறு நீதிபதிகள் அமர்வு  உத்தரவிட்டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் குண்டுதாக்குதல்  நடத்தவுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவல்களை அறிந்திருந்தும் அதனை மறைத்தமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ், மௌலவிகள் உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், விசாரணை ஆரம்பமாவதற்கு முன்னர் 17 ஆவது பிரதிவாதி சிறைச்சாலையில் உயிரிழந்தமையினால் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இவ்வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதால், அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு முன்னர் அனைத்துப் பிரதிவாதிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றின் அத்தியட்சகர்களுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.  அத்துடன், வழக்கின் 13 ஆவது பிரதிவாதியை எதிர்வரும் 15 ஆம் திகதி வெலிசர வைத்தியசாலையிலும் 18 ஆம் திகதி ஆயுர்வேத வைத்தியசாலையிலும் நடைபெறவுள்ள மருத்துவ முகாம்களில்  முன்னிலைப்படுத்துமாறும்  சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய தினம் 24 பிரதிவாதிகளும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40
news-image

எரிபொருள் விநியோக நெருக்கடி: நாடளாவிய ரீதியில்...

2026-10-11 15:24:39