நுவரெலியா, அம்பகமுவ ஆகிய உள்ளூராட்சி சபைகளை தலா மூன்று மூன்று சபைகளாக பிரித்து ஆறு சபைகளை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேபோன்று அங்குராங்கத்தை, வலப்பனை, கொத்மலை ஆகிய உள்ளூராட்சி சபைகளையும் தலா இரண்டு சபைகளாக அதிகரிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தற்போதுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளை 12 ஆக அதிகரித்து விட்டு அடுத்தவாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை அதிகரிப்பது தொடர்பிலும் எல்லை மீள் நிர்ணயம் குறித்தும் ஆராய்வதற்கான கூட்டம் நேற்று பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் இடம்பெற்றது. உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், உபதலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம், முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுக்குமார், எம். திலகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மற்றும் உள்ளூராட்சி மகாணசபைகள் அமைச்சின் செயலாளர், உட்பட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது நுவரெலியா, அம்பகமுவ உள்ளூராட்சி சபைகளை தலா மூன்று மூன்று சபைகளாக பிரித்து ஆறாக அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. இதற்கான ஒழுங்கு முறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதனைவிட நுவரெலிய மாவட்டத்தில் அங்குராங்கெத்தை, வலப்பனை, கொத்மலை, ஆகிய உள்ளூராட்சிசபைகளை தலா இரண்டு சபைகளாக பிரித்து ஆறாக அதிகரிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது. இவை தொடர்பான தகவல்களை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் அதிகாரிகள் நாளை பெற்றுக்கொள்வது என்றும் இணக்கம் காணப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் சந்தித்துப்பேசி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளையும் 12ஆக அதிகரித்ததன் பின்னர் அடுத்தவாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் நுவரெலிய மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளை பிரித்து 12 சபைகளாக மாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கான எல்லை நிர்ணயங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அடுத்தவாரம் உள்ளூராட்சி திருத்த சட்டம் தொடர்பிலான வர்த்தமான அறிவித்தலை வெளியிட முடியும். இதனால் உள்ளூராட்சித் தேர்தல் பெரும் தாமதமடையப்போவதில்லை. ஒருவார காலம் தாமதம் அடையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. நுவரெலியாவில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா, அம்பகமுவ, பிரதேசத்திலேயே சீர்திருத்தம் செய்யப்படவுள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் நன்மை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நுவரெலிய மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் சீர்திருத்தங்களை மேற்கொண்டுவிட்டு சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அதனை மேற்கொள்ளாது இருக்க முடியாது. எனவேதான் அங்குராங்கத்த, வலப்பனை, கொத்மலைப்பகுதிகளிலும் சீர்திருத்தம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்றைய சந்திப்பில் வலியுறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM