சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே நாளில் கிடைக்கும் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே

08 Sep, 2026 | 06:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒருசில பிரதேசங்களில் சுருக்குவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் படகுகளுக்காக அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலம் ஒரு வருடம். ஒரே நாளில் இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள்  வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மீன்வளங்களை பாதுகாக்கவும், மீன்பிடித்துறையின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே சுருக்குவலை பாவனை தொடர்பாக நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதேசங்களில் சுருக்குவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் படகுகளுக்காக அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலம் ஒரு வருடம். ஒருநாளில் இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

2026ஆம் ஆண்டுக்காக திருகோணமலை மாவட்டத்தில் 174 அனுமதிப்பத்திரங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 அனுமதிப்பத்திரங்களும், மன்னார் மாவட்டத்தில் 30 அனுமதிப்பத்திரங்களும்,புத்தளம் மாவட்டத்தில் 68 அனுமதிப்பத்திரங்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 அனுமதிப்பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த வலைகளுக்காக அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்த வலை பயன்படுத்தப்படுவதால் சிறிய மீன்களும் சிக்குகின்றன. இதனால் மீன் தொடர்பான ஆய்வுகளின்படியே அதற்கான காலம் தீர்மானிக்கப்படுகின்றது. இதனால் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.

மீன்பிடித் தொழிலில் மீன்பிடிப்பதற்கான முறைமைகள் பல உள்ளன. இவற்றில் சுருக்குவலை பாவனையில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. கடல்வள ஆய்வு நிறுவனத்தினால் ஆய்வு செய்யப்பட்டு விஞ்ஞானபூர்வமான முறையிலேயே இந்த நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

மீன்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இதனை முறையாக செய்யாவிட்டால் மீன் வளங்களை இழக்க நேரிடலாம். மீன்பிடித்துறையின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59