பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும் விடயங்களை பரிசீலனை செய்கிறோம் - நீதி அமைச்சர் 

08 Sep, 2026 | 05:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது  பொதுநலவாய உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக  ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல, அது தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்தி  செயற்படும் ஒரு அமைப்பாகும். இச்சங்கத்தினரால் முன்வைக்கப்படும் விடயங்களை பரிசீலனை செய்கிறோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சித் தலைவர் வழமைப்போன்று  தெரியாத பல விடயங்களை சபையில் குறிப்பிடுகிறார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தவறானது நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது  பொதுநலவாய உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக  ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல, அது தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்தி செயற்படும்  ஒரு அமைப்பாகும்.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இங்கு வந்து பல விடயங்களை குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்.  இந்த அமைப்பின் தலைவர் என்னை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தார். நானும் அனுமதியளித்தேன். அன்றைய தினம் நான் கொழும்பில் இல்லாத காரணத்தால் அவர் அந்த சந்திப்பை மறுத்து விட்டார். ஆகவே இந்த சங்கத்தின் நிலைப்பாட்டை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்று ஏற்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59