தமிழ் சினிமாவில் வணிக மதிப்பு கொண்ட நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அன்பில் அவன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமது, கதிர் பாபு, மகா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கெளதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் - ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணாமூர்த்தி - அசோக் செல்வன்- அபினயா செல்வம்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல் வெளியாகி இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே நடிகர் அசோக் செல்வனின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாகும் முதல் படம் இது என்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM