பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாய வீதித் தகுதிப் பரிசோதனை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

08 Sep, 2026 | 04:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

கட்டாய வீதித் தகுதிப் பரிசோதனை வாகன உரிமையாளர்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதற்காகக் கொண்டுவரப்படவில்லை. பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஆரம்பப் பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்து,விபத்துகளைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே புதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08)  நடைபெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும்  பேருந்துகள், வேன்கள், அலுவலக வேன்கள் மற்றும் பாடசாலை வேன்கள் போன்ற  வாகனங்கள் இனி ஒவ்வொரு 5000 கிலோமீட்டருக்கும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் கட்டாய வீதித் தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள வருடாந்த வீதித் தகுதிப் பரிசோதனை போன்று அல்லாமல், இது அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட குறுகிய, எளிமையான ஒரு பரிசோதனையாகும்.1500 ரூபா முதல் 2000  ரூபா வரையிலான செலவில் மேற்கொள்ளப்படும் இந்தப் பரிசோதனை,வாகனத்தின் சில முக்கிய இயந்திர செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

சொந்தத் தேவைகளுக்கான தனியார் வாகனங்களுக்கு இது கட்டாயமில்லை என்றாலும்,அவர்களும் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வது  சிறந்ததாக அமையும்.

 கடந்த ஆண்டு  மே மாதம் இடம்பெற்ற கொத்மலை பஸ் விபத்து, எல்ல விபத்து மற்றும் சமீபத்தில் இடம்பெற்ற டிராக்டர் மோதல் உள்ளிட்ட தொடர்ச்சியான பாரிய விபத்துகளைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளிவந்துள்ளன.ஒரு பஸ் ஒரு பக்க பிரேக் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இயங்கியுள்ளது.மற்றொரு பஸ்ஸில் பிரேக் கருவிக்கு பதிலாக தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் குழாய்  பயன்படுத்தப்பட்டுள்ளது. மொனராகலை விபத்தில், டிராக்டர் பெட்டியில் விளக்குகள் எதுவுமில்லாததால் பின்னாலிருந்து வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு ஐவர் உயிரிழந்தார்கள்.

சுற்றுலாப் பயணங்களுக்காக வாடகைக்கு எடுக்கப்படும் வாகனங்கள் ஒரு வணிகத்தின் அங்கமாகவே கருதப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காகப் பணம் செலுத்தும் போதிலும்,போதிய பராமரிப்பின்மையால் ஆபத்துகளைச் சந்திக்கின்றனர்.

இந்த நடவடிக்கை வாகன உரிமையாளர்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதற்காகக் கொண்டுவரப்படவில்லை. பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஆரம்பப் பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்து, விபத்துகளைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59