வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் – ரவிகரன் வலியுறுத்தல்!

08 Sep, 2026 | 04:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாணத்தில் அதிகளவான தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுதாலும், ஆசிரியர்களுக்குரிய முழுமையான பயிற்சிகள் வழங்கப்படாமையாலும் பாடசாலைகளில் காணப்படுகின்ற பழுதடைந்த இலத்திரனியல்சாதனங்களை துரிதகதியில் திருத்துவதில் இடர்நிலைகள் காணப்படுகிறது.தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறையைச் சீர்செய்வதோடு ஆசிரியர்களுக்குரிய முழுமையான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  துரைராசா ரவிகரன் கல்வி அமைச்சரான பிரதமரிடம் வலியுறுத்தினார்.

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள்  துரிதகரமாக  முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாண்டிற்குள் ஐம்பது சதவீதமான ஆளணிப் பற்றாக்குறை சீர்செய்யப்படும், ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளும் வழங்கப்படும் என  பிரதமரும், கல்வி, உயர்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமரசூரிய  பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (08)  நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள்  வேளையின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா  ரவிகரன்,

பாடசாலைகளில் பெருகியுள்ள இலத்திரனியல் கழிவுகளை சீராக்குவதில் வன்னி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் இடர் நிலவுகின்றது. வலய மட்ட வன்பொருள் அணியே பாடசாலைகளில் உள்ள கணினிகளைத் திருத்துவதோடு இலத்திரனியல் சாதனங்களுக்குரிய தொழினுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளையும் வழங்குகிறது.

இந்த வன்பொருள் அணி, ஒவ்வொரு வலயத்தில் உள்ள தகவல் தொழினுட்ப ஆசிரியர்களைக் கொண்டே இயங்குகிறது.வடமாகாணத்தில் மொத்தமாக 170 தகவல் தொழினுட்ப ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். 31 சதவீத இப்பற்றாக்குறைச் சதவீதமும்  வடமாகாணத்தில் உள்ள சீரற்ற ஆசிரியர் வளப்பரம்பலால் தீவகம்,தென்மராட்சி,மடு உள்ளிட்ட கல்வி வலயங்களில் மிகவும் அதிகமாக உள்ளது.

இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறையோடுஇ ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று கணினிகளைத் திருத்துவதற்கும் தொழினுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் வன்பொருள் அணியினர் மிகவும் இடர்படுகின்றனர்.அத்தோடு மேசைக் கணினிகளைத் திருத்துவதற்குரிய பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற போதும்  மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள்,வரைபட்டிகைகள்? பல்லூடக எறிவைகள் மற்றும் சூட்டிகைப் பலகைகள் உள்ளிட்டவற்றில் வன்பொருள் திருத்தங்களை மேற்கொள்வதற்கு போதியளவு பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

 இவ்வகையான இலத்திரனியல் சாதனங்களின் பழுதுகளை திருத்துவதிலும் தொழினுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை உரிய காலத்தில் வழங்குதிலும் தாமதம் ஏற்படுகிறது. இத்தாமதம் பாடசாலைகளில் இலத்திரனில் கழிவுகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, இவ்வகையான சிக்கலைத் தீர்ப்பதற்கு தங்கள் அமைச்சு எப்படியான நிலைபேறான தீர்வை முன்வைக்கப்போகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய,பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எழுப்பிய கேள்வி மிகவும் பொருத்தமானது.இலத்திரனியல் சாதனங்களைத் திருத்துவதற்கு எமக்கு ஆசிரியர்களின் குறைபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது அதற்காக ஆசிரியர்களை பணிக்கமர்த்துவதற்கான வேலைகளை மூன்னெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு ஆளணி சேர்ப்புத் திட்டத்தின் ஊடாக இந்தக் குறைபாடு தீர்க்கப்படும்.தற்போது குறித்த ஆளணி சேர்ப்பிற்கான பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த வருடமே அதற்குரிய செயற்பாடுகள் முடிவுறும்.

தற்போது காணப்படுகின்ற அந்த ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறையில், ஐம்பது சதவீதமான ஆளணிப் பற்றாக்குறை இந்த வருடத்திற்குள்ளேயே நிரப்பப்படும்.அதேவேளை அந்த ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும் நாங்கள் ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கின்றோம்.மேலும் பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்புவசதிகள், கருவிகள் பழுதுபாரத்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாணசபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகள் கோரினால் மேலதிக நிதியும் ஒதுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59