'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'இஞ்சி வெல்லம்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு

08 Sep, 2026 | 04:21 PM
image

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வரும் படத்திற்கு 'இஞ்சி வெல்லம்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான துண்டு காணொளி ஒன்றை படக்குழுவினர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி ஆகிய இருவரும் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். அவிக் மொஹபாத்யாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறை நாளில் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மணிரத்னத்தின் காதல் படைப்புகளுக்கான பிரத்யேக முத்திரையுடன் கூடிய தோற்றத்தில் விஜய் சேதுபதியும்... சாய் பல்லவியும்.. தோன்றுவதும், அவர்களின் வசீகரமான காந்த புன்னகையும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

மணிரத்னம்- ஏ ஆர் ரஹ்மான் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி - கூட்டணியில் உருவாகி இருப்பதாலும்... 'இஞ்சி வெல்லம்' என்ற தலைப்பு ரசிகர்களை கவர்ந்திருப்பதாலும்... இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்திய அளவில் எகிறி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39