காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்ட 'பிக்காசோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

08 Sep, 2026 | 04:12 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ ராஜ்குமாரும், தமிழ் சினிமாவின் ஜென் ஸீ தலைமுறை நடிகரான அபிஷன் ஜீவந்த் ஆகியோரும் முதன்முதலாக இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு 'பிக்காசோ' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 'காந்தாரா' படத்தின் மூலம் பான் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கன்னட திரையுலக நட்சத்திர நடிகரான ரிஷப் ஷெட்டி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிக்காசோ' திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், அபிஷன் ஜீவந்த், ஷிவானி நாகரம், யோக லட்சுமி, கானா வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை டிராமாம்பெனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. பாலமுருகன் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிவ ராஜ்குமாரும், அபிஷன் ஜீவந்தும் வாயில் சரவெடி பட்டாசு ஒன்றினை வைத்துக்கொண்டு.. ஸ்டைலாக தோன்றுவது ரசிகர்களுக்கு படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருப்பதுடன், இந்த திரைப்படம் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என்ற அவதானத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39