நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

08 Sep, 2026 | 03:45 PM
image

நடிகர் கருணாஸ் - நிமிஷா சஜயன் ஆகியோர் கதையின் நாயகர்களாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'என்ன விலை' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், வை.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், தீபா சங்கர், 'சித்தா' தர்ஷன், பிரதீப், நிரோஷா கவி, 'கோலி சோடா' பாண்டி, ஷாஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரித்திருக்கும் இந்த திரைப்படத்தை கலாமாயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜிதேஷ் விஷ்வாம்பரன் - அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்வில் பங்கு பற்றி நடிகர் கருணாஸ் பேசுகையில், ''2001 ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் பாலா இயக்கத்தில் 'லொடுக்கு பாண்டி'யாக 'நந்தா' படத்தில் அறிமுகமான முதல் காட்சி படமாக்கப்பட்ட இடத்தில். இப்படத்தின் காட்சியும் படமாக்கப்பட்டது. இதனால் இந்த திரைப்படத்துடன் எம்மால் உணர்வு ரீதியாக ஒன்றி விட்டேன்.

எமக்கு மலையாள கதாசிரியர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. இந்தக் கதை எளிய மக்களை பற்றியது. விளிம்பு நிலை மக்களுக்கு அரச அமைப்புகளால் ஏற்படும் நெருக்கடிகள் - வாழ்வாதார சிக்கல் குறித்த கேள்வியை வலிமையாக எழுப்பியுள்ளது. இந்த திரைப்படம் வெளியான பிறகு நிச்சயம் பேசப்படும். அதிலும் நீதிமன்றத்தில் சட்டத்தரணியின் உரையாடலுக்கு ரசிகர்களிடத்தில் கரவொலி கிடைக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39