(க.சிவலிங்கமூர்த்தி)
2029இல் என்னை பொது வேட்பாளராகக் கூட நிறுத்தலாம். அநுர, குமார் குணரத்தினம் மற்றும் சீலரத்ன ஆகியோரில் யார் ஜனாதிபதி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தற்போது நாட்டின் மகாநாயக்க தேரர்களை இலக்குவைத்து பல்வேறு தரப்பினரும் மிக மோசமான முறையில் அவதூறான வார்த்தைகளால் திட்டி அறிக்கைகளை வெளியிட்டு வருவதைக் காண முடிகிறது. இந்த நபர்கள் யாருடைய தேவையின் அடிப்படையில், இவ்வாறு பேசுகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். முப்பிரிவு மகாநாயக்க தேரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவதூறான பிரசாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும். மகா சங்கத்தினர் நாட்டுக்காக மீண்டும் விகாரைகளை விட்டு வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும் சூழலை உருவாக்கக் கூடாது.
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கிராமப்புற வைத்தியசாலைகளை மேம்படுத்தி மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். மாறாக, நகர்ப்புற வைத்தியசாலைகளுக்குச் செல்வதால் மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. மக்கள் அரசாங்கத்துக்கு அதிகாரத்தை வழங்கியது இந்த முறையில் இன்னல்களுக்கு முகங்கொடுப்பதற்காக அல்ல.
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தவறுகளை இழைத்திருந்தால் எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் நீதிமன்றத்தின் ஊடாக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டனைகள் வழங்கப்படாமை காரணமாகவே அரசியல்வாதிகள் தொடர்ந்தும் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். தேசிய மக்கள் சக்தி ஊடாகவும் நாட்டுக்குப் பாதகமான சூழல் உருவாகலாம்.
அத்துடன், 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமாரவும் நானும் குணரத்தினமும் ஆகிய மூவர் மட்டுமே தேர்தல் களத்தில் எஞ்சியிருப்பது குறித்து கம்மன்பில மற்றும் ஜனாதிபதி கூறியுள்ளனர். சிலவேளை என்னை பொது வேட்பாளராகக் கூட நிறுத்தலாம். பார்ப்போம் 2029ஆம் ஆண்டில்.
ஒன்றில் நான் ஜனாதிபதி, அல்லது அநுர ஜனாதிபதி, அல்லது முன்னிலை சோசலிஸ கட்சி தரப்பில் இருந்து உருவாகும் ஜனாதிபதி - இவர்களில் யார் என்பதை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை ஒரு கேலிக்கூத்தாக மாற்றக் கூடாது. நாட்டை ஆளக்கூடிய பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய முழுமையான அதிகாரமும் உரிமையும் இந்நாட்டின் சாதாரண மக்களிடமே உள்ளது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM