(செ.கவிஷனா)
புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை விரைவாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்பாகவே ஜனாதிபதி இவ்வாறானதொரு கூற்றை வெளியிடுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கும் என எதிர்க்கட்சியினர் விமர்சித்திருந்தனர்.
இது குறித்து பதிலளிக்கும் வகையில் திங்கட்கிழமை (07) ஊடகமொன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,
உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியமானவை என்பதால், பாராளுமன்றத்தில் விரைவாகச் சமர்ப்பித்து நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கூறியதில் எந்த முரண்பாடும் இல்லை என விளக்கமளித்தார். மேலும், ஒருவேளை உயர் நீதிமன்றம் இச்சட்டமூலத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்பு (மக்கள் தீர்ப்பு) அவசியம் என உத்தரவிட்டால், அதனை எதிர்கொள்வதிலும் அரசாங்கத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், அரசாங்கத்தின் இந்த 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுதந்திர செயற்பாட்டு மையம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.
அதேவேளையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்தையும் நீக்கி, நாட்டின் அனைத்துச் சமூகங்களுக்கும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் தற்போது 46 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்காவாத சட்டத்தை நீக்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதற்கு அமைச்சர் விளக்கமளிக்கையில், அரசாங்கத்தின் சார்பில் திட்டமிட்ட தாமதம் எதுவும் இல்லை, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறைகளில் ஏற்படும் இயல்பான நடைமுறைத் தாமதங்களே இதற்குக் காரணம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது நாட்டில் நீண்டகாலமாக நிலவிய யுத்தம், பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பரந்த அளவிலான தலைப்பாகும். இது அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் முக்கியமாக வடக்கு,கிழக்கு மக்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு பாரிய விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. மேலும், இச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களைக் கைது செய்வது தொடர்பாகப் பொலிஸார் மேற்கொள்ளும் நடைமுறை விளக்கங்கள் மற்றும் சட்ட வரையறைகள் மிகவும் சிக்கலானதாக அமைந்திருப்பதும் தாமதத்திற்கு ஒரு காரணியாகும். எவ்வாறாயினும், அரசாங்கம் தான் அளித்த வாக்குறுதியின்படி, பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் மிக விரைவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கான திருத்தங்களை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM