(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிதல் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வேன் மற்றும் முச்சக்கர வண்டிகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை தமது வாகனத்தின் தரம் தொடர்பில் பரிசீலனை செய்து உரிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் தரம் தொடர்பில் முறையான பரீசீலனை செய்யாமல் அவற்றை பயன்படுத்தியுள்ளமை இவ்வாறான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டங்களையும், ஒழுங்குவிதிகளையும் கட்டாயப்படுத்த வேண்டும். ஏனெனில் ஏனைய நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் வீதி போக்குவரத்து தொடர்பில் திருப்திகரமான தன்மை கிடையாது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிதல் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும்.இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் தீர்மானம் 1 வருடகாலமாக பிற்போடப்பட்டது. இனி இந்த தீர்மானத்தை பிற்போட முடியாது என்றார்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM