6G தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய கூட்டமைப்பில் இந்தியா இணைய தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) உள்ளிட்ட துறைகளில் இந்தக் கூட்டாண்மை புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5G வலையமைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, 6G தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா முக்கிய நகர்வை மேற்கொண்டுள்ளது. இது தொழில்நுட்பத் துறையில் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
6G வலையமைப்புகள் இணைய வேகத்தை அதிகரிப்பதுடன், செயற்கை நுண்ணறிவு முதல் ரோபோட்டிக்ஸ் வரையிலான பல்வேறு துறைகளில் புதிய தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 6G தொழில்நுட்பத்தை உருவாக்கும் 24 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள சேப்பல் ஹில் பகுதியில் நடைபெற்ற G20 புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்தின்போது இது தொடர்பான முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது, இந்திய மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதாவுக்கும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்குக்கும் இடையே விரிவான இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களின் முடிவில், 6G கூட்டணியில் இந்தியா உத்தியோகபூர்வமாக இணைவது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
G20 புத்தாக்கக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியக் குழுவுக்கு இணையமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமை தாங்கியுள்ளார். அவருடன் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் வலுவான நிலையை இந்தக் கூட்டாண்மை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய புத்தாக்க முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM