‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என பெயர் மாற்றும் வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

Published By: P. Saranya

08 Sep, 2026 | 12:29 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் "மெக்சிகோ" என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக "அமெரிக்கா" எனக் குறிப்பிட்டு "நியூ  அமெரிக்கா" என மாற்றி வரைபடம் ஒன்றை அமைத்துப் பதிவிட்டுள்ளார். இந்த வரைபடத்தின் புகைப்படம் வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ எக்ஸ்  கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது பதிவில், "வாக்குப்பதிவு முறைகேடுகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான நியூ மெக்சிகோவின் பெயரை 'நியூ அமெரிக்கா' என மாற்ற வேண்டும் என பலர் பரிந்துரைத்தனர். மக்களுக்கு இது மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கும்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த யோசனைக்கு நியூ மெக்சிகோ மாநிலத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ஆளுநர் மிஷெல் லூஜான் கிரிஷாமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியின் தனிப்பட்ட நிர்வாக உத்தரவால் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது.

2025 ஜனவரியில் இதனை "அமெரிக்க வளைகுடா" என பெயர் மாற்ற உத்தரவிட்டார்.

கனடாவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், எல்லைப் பகுதியான ஒன்டாரியோ ஏரியை "லேக் அமெரிக்கா" என மாற்ற உத்தரவிட்டார்.

அமெரிக்க புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பின் உத்தியோகபூர்வப் புதுப்பிப்பைத் தொடர்ந்து, கூகிள் மேப்ஸ் மற்றும் ஆப்பிள் மேப்ஸ் ஆகியவை அமெரிக்க பயனர்களுக்கு 'லேக் அமெரிக்கா' மற்றும் 'அமெரிக்க வளைகுடா' என மாற்றிக் காண்பிக்கின்றன. எனினும், கனடா மற்றும் பிற நாடுகளில் பழைய பெயர்களே காண்பிக்கப்படுகின்றன.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்ப்பின் மக்கள் ஆதரவு வீதம் 33 சதவீதமாக  குறைந்துள்ள காலகட்டத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33