உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா விரைவில் 2ஆம் இடத்தைப் பிடிக்குமென தகவல்

08 Sep, 2026 | 11:05 AM
image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியா விரைவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியாவின் அண்டை நாடான சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் சுமார் 11,000 கிலோமீற்றர் நீளமான மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உள்ளன.

சீனாவுக்கு அடுத்தபடியாக, 1,386 கிலோமீற்றர் நீளமான மெட்ரோ ரயில் வலையமைப்புடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா 1,170 கிலோமீற்றர் நீளமான மெட்ரோ ரயில் வழித்தடங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் தற்போது 26 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டில் ஐந்து நகரங்களில் வெறும் 245 கிலோமீற்றர் நீளத்துக்கு மட்டுமே இருந்த மெட்ரோ ரயில் வலையமைப்பு, தற்போது 1,170 கிலோமீற்றராக விரிவடைந்துள்ளது.

அமெரிக்காவை விட இந்தியா தற்போது 216 கிலோமீற்றர் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் மேலும் 900 கிலோமீற்றர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கட்டுமானங்களில் ஒரு சிறிய பகுதி கூட பயன்பாட்டுக்கு வந்தால், இந்தியா அமெரிக்காவை முந்தி உலகளவில் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் வலையமைப்பைக் கொண்ட நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33