இந்தியாவின் மிகமுக்கிய பங்காளிகளில் இலங்கை ஒன்று : பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

08 Sep, 2026 | 10:50 AM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலுரிமை' மற்றும் பிராந்தியப் பாதுகாப்பிற்கான 'மகாசாகர்' ஆகிய முக்கியக் கொள்கை முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை மிகமுக்கியமான பங்காளி  நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் முன் அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

"மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக புதுடெல்லியிலிருந்து இலங்கை புறப்படுகிறேன். இந்த விஜயத்தின் போது இலங்கைத் தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை எதிர்நோக்கியுள்ளேன். மேலும், இலங்கையில் வாழும் துடிப்பான இந்தியச் சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளேன்.

நமது நீண்டகாலப் பங்களிப்பு மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், 'அண்டை நாடுகளுக்கு முதலுரிமை' மற்றும் 'மகாசாகர்' ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை நமது மிக முக்கியப் பங்காளிகளில் ஒன்றாகும்." என அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக பண...

2026-10-15 01:51:57
news-image

சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதிப்...

2026-10-15 01:46:49
news-image

அனைத்து மாகாணங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம்...

2026-10-15 01:35:39
news-image

இலங்கை மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்படுவதை...

2026-10-15 01:26:05
news-image

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல்...

2026-10-14 17:14:31
news-image

தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் மீளாய்வு :...

2026-10-14 12:43:43
news-image

மூன்று தசாப்தகாலப் போரின் விளைவுகளால் இன்னமும்...

2026-10-14 14:15:26
news-image

பௌத்த மதத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக...

2026-10-14 16:37:07
news-image

சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் தேரர்கள்...

2026-10-14 17:39:44
news-image

அரசாங்கம் மதக் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி நாட்டை...

2026-10-14 15:54:43
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்...

2026-10-14 14:13:27
news-image

பின்லாந்தில் அமைச்சர் பிமல்: செம்மணிப் புதைகுழி...

2026-10-14 21:24:26