இலங்கை பட்டய ஊடக கற்கை நிறுவன சட்டமூலம்: உயர்நீதிமன்ற தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்

Published By: P. Saranya

08 Sep, 2026 | 02:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்பதால், அதனை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (08)  செவ்வாய்க்கிழமை காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.  பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போதே இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின்  வியாக்கியானத்தை சபைக்கு அறிவிக்கும்போதே இவ்வாறு  தெரிவித்தார்.

இதுதொடர்பில் சபாநாயகர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கை பட்டய ஊடக கற்கை நிறுவன  சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண், அதனால் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என  உயர்நீதிமன்றம் தீர்மானத்துள்ளதாக அறிவித்திருக்கிறது. 

உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தங்கள் அதில் சேர்க்கப்பட்டால், குறித்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் உயர் நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக பண...

2026-10-15 01:51:57
news-image

சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதிப்...

2026-10-15 01:46:49
news-image

அனைத்து மாகாணங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம்...

2026-10-15 01:35:39
news-image

இலங்கை மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்படுவதை...

2026-10-15 01:26:05
news-image

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல்...

2026-10-14 17:14:31
news-image

தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் மீளாய்வு :...

2026-10-14 12:43:43
news-image

மூன்று தசாப்தகாலப் போரின் விளைவுகளால் இன்னமும்...

2026-10-14 14:15:26
news-image

பௌத்த மதத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக...

2026-10-14 16:37:07
news-image

சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் தேரர்கள்...

2026-10-14 17:39:44
news-image

அரசாங்கம் மதக் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி நாட்டை...

2026-10-14 15:54:43
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்...

2026-10-14 14:13:27
news-image

பின்லாந்தில் அமைச்சர் பிமல்: செம்மணிப் புதைகுழி...

2026-10-14 21:24:26