பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் !

08 Sep, 2026 | 10:11 AM
image

கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயமானது, ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு விளங்குகிறது என்றால், அது மிகையாகாது. கொழும்பு புறக்கோட்டையில் முதலாம் குறுக்குத்தெருவில் அமையப்பெற்ற சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்துடன் பம்பலபிட்டி காலி வீதியில் அமையப்பெற்ற சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம் மிகநெருங்கிய சரித்திரப்பூர்வமான தொடர்புகளைக் கொண்டு விளங்குகின்றது.

புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமையப்பெற்ற சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிகள் ஆலயமானது, அடிப்படையில், இந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் தம் வியாபார நோக்கமாக   குடியேறிய உயர் வர்த்தக சமூகத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பல ஆசிய நாடுகளுக்கு தம் வியாபார நோக்கங்கள்; காரணமாக குடியேறிய பல சமூகங்களைச் சேர்ந்;த  சமூகத்தினர், தாம் குடியேறிய நாடுகளில் எல்லாம், முருக வழிபாட்டிற்காக கதிர்வேலாயுத சுவாமிகள் திருத்தலங்களை அமைத்து  அதனை செவ்வனே பராமரித்து வழிபாட்டிற்காகப்  பொது மக்களுக்கு கையளித்தனர்.

இவர்கள் வருகையானது பொதுப்படையில்  ஏறத்தாழ 18ம் நூற்றாண்டில் இடம்பெற்றது எனலாம். ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து கடல்வழிப்பாதையுடாக,  குறிப்பாக இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தினூடாக  வந்து இவர்கள் குடியேறினர். இவர்களில் ஒரு பகுதியினரான செட்டியார்  சமூகத்தினர் பெருமளவில்  கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள செட்டியார் தெருவில் குடியேறியதன் காரணத்தால், இக் குறிப்பிட்ட வீதியானது இன்றுவரை  செட்டியார் தெருவென அழைக்கப்பட்டு வருகின்றது.

மேலும்  மற்றுமொரு  உயர் வர்த்தகச் சமூதக்தினர் இந்தியாவில் இருந்து  வந்து இலங்கையில் குடியேறினர். இவர்கள் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியினை அண்மித்த 1ஆம் குறுக்குத்தெரு, 2ஆம் குறுக்குத்தெரு, 3ஆம் குறுக்குத்தெரு, மெயின் வீதி, கெய்சர் வீதி ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய இடங்களை “சம்மாங்கோடு” எனப் பெயர் சூட்டி அழைத்தனர். காரணம், இக்குறிப்பிட்ட சமூகத்தினர் தென்னிந்தியாவில், காரைக்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள “சம்மாங்கோடு” என்னும் பகுதியிலிருந்து வந்து இங்கு குடியேறிய வர்த்தக சமூகத்தினர் ஆவர். ஆகையால் இவர்கள் தமது பரம்பரைத் தொழிலான வர்த்தகத் துறையில்  ஈடுபட்டு வந்தமையாலும், இவ்விடத்தை அப்பெயரால் குறிப்பிட்டு அழைத்தனர்.

முருக பக்தர்களான இவர்கள், தாம் காலூன்றிய இடங்களிலெல்லாம் கதிர்வேலாயுத சுவாமிகள் திருத்தலங்களை நிறுவி, பூஜித்து வழிபட்டனர். 1874ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கொலரா நோயின் காரணமாக, பொதுமக்களது சுதந்திரமான நடமாடச்; செயற்பாடுகள் என்பன அக்கால  அரச ஆட்சியாளர்களால்  கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில், கதிர்காம உற்சவத்திற்கு, புறக்கோட்டையில் அமைந்துள்ள மூன்று கதிர்வேலாயுத சுவாமிகள் திருத்தலங்களிலிருந்து புறப்பட்ட முருக அடியார்கள்;, பம்பலப்பிடிய காலிவீதிப் பகுதியினுடாகப் பயணித்த போது பக்தர்கள் அக்கால ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதனால் பெருமளவு முருகபக்தர்கள்;, காலிவீதியில் அக்காலத்தில் நீண்ட தூரப்பயணிகள்; தங்குமிட மடங்களாக அமைந்திருந்த மடங்களான பம்பலப்பிடிய பழைய கதிரேசன் மடம் பம்பலப்பிடிய புதிய கதிரேசன் மடம்,  மற்றும் பம்பலப்பிடிய  சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் மடம் ஆகியவற்றில்  தங்கியிருந்தனர். தாம் கொண்டு வந்த காவடிகளை இம்மடங்களில் வைத்துவிட்டு, மிகுந்த கவலையுடன் அன்றிரவை அம் மடங்களில் அப்பக்தர்கள் கழித்தனர். 

இதன் விளைவாக,  எதிர்காலத்தில் கதிர்காம உற்சவத்தின் போது பக்தர்கள் இவ்வுற்சவத்தை கொழும்பிலேயே அனுசரிகலாம் என முடிவெடுத்தனர். இந்த வகையில் காலக்கிரமத்தில் பம்பலப்பிட்டிய காலிவீதியில் அமையப்பெற்று இருந்த  மூன்று மடங்களும், மூன்று வெவ்வேறு மடக்கோவில்களாக உருப்பெற்றன. அஃதாவது, காலக்கிரமத்தில்,  பம்பலப்பிட்டிய காலிவீதியில் அமையப்பெற்ற மூன்று மடங்களும், மூன்று வெவ்வேறு மடக்கோவில்களாக உருப்பெற்றன. அவையாவன: பம்பலபபிட்டிய பழைய கதிரேசன் கோவில், பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் கோவில், பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் ஆலயங்களாவனவாகும். இம் மூன்று பம்பலபிட்டிய திருத்தலங்களும், புறக்கோட்டை செட்டியார் தெரு பழைய கதிரேசன் கோவில், புறக்கோட்டை செட்டியார் தெரு புதிய கதிரேசன் கோவில், மற்றும் புறக்கோட்டை  1ஆம் குறுக்குத்தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிகள் கோவிலுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. 

பம்பலபிட்டிய சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் திருத்தலம், 1910 ஆம் ஆண்டு முதலில் கட்டப்பட்டதாக அறிகின்றோம். மேலும் இவ்வாலயமானது, 1996 ஆம் ஆண்டு புனர்நிர்மாணப் பணிகள்; அரம்பமாகி 2001ஆம் பூர்த்தி அடைந்ததன் விளைவாக 2001ஆம் ஆண்டு முதலாவது  கும்பாபிN~கம் இத்திருத்தலத்தில்  இனிதே இடம்பெற்றறது.  அததைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு மீண்டுமொரு கும்பாபிN~கம் இடம்பெற்றது. தற்போது சிறப்பாகப் புணர்நிர்மாணப் பணிகள் செவ்வனே நிறைவடைந்ததை அடுத்து மூன்றாவது கும்பாபிN~கத்தை  இவ்வருடம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17ஆம்திகதி வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடவுள்ளதை இலங்கைவாழ் இந்துப் பெருமக்கள், மிக ஆர்வத்துடனும் மகிழ்சியுடனும் எதிர்பார்த்துள்ளனர். இதனையொட்டி, செப்டெம்பர் மாதம் 11ம் திகதி முதல், தொடர்ச்சியாக பல்வேறு பூர்வாங்க கிரிகைகள் இத்திருத்தலத்தில் இடம்பெறவுள்ளன. 

பக்தர்கள் சுவாமிக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் செப்டெம்பர் மாதம் 14ம் திகதியும் மற்றும்  15ம் திகதி காலை 7.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இடம்பெறும். அதேவேளை, எதிர்வரும் 14ம் திகதி, ஆவணி சதுர்த்தி தினமாகும் என்பதுவும், குறிப்பிடத்தக்கதாம். 

அடிப்படையில் இச்சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் திருத்தலமானது,  1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரும், 1958ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னரும், பெருமளவிலான உயர் இந்திய வம்சாவழிச்சமூகத்தினர், சம்மாங்கோடு திருத்தலங்களை, இலங்கை மலைநாட்டை சேர்ந்த ஒர் உயர்சிறந்த வர்த்தக சமூகத்தினரிடம் கையளித்துவிட்டு தம் சொந்த ஊருக்கு திரும்பினர். 1963ம் ஆண்டு தொடக்கம், கொழும்பில் அமைந்துள்ள   இவ்விரு சம்மாங்கோடு திருத்தலங்களும் இவ் உயர்வர்த்தக சமூகத்தினரினால் மிகவும் அர்பணிப்புடன்  திறம்பட  தேவைக்கேற்ப நிர்வகித்து வருகின்றனர். 

 பம்பலபிட்டி காலி வீதியில் அமையப்பெற்ற சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயமானது மேற்கு நோக்கிய ஒன்பது தளங்களைக் கொண்ட 108 அடி உயரமுடைய கம்பீரமான ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றது. மேலும், இத் திருத்தலமானது  பக்தர்களைக் கட்டிஈர்க்கும்   வகையில் விநாயகப் பெருமானது  புராண இதிகாசக் கதைகளை   உள்அடக்கிய அருமையான அழகு செறிந்த   வர்ணம் பூசப்பட்ட   சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த கண்கவர் கோபுரததைக் காணக்கூடியதாக உள்ளது.  பல மையில்களுக்கு அப்பாலேயே இக்கோபுரத்தை  தரிசிக்கும் பேற்றை  அடியவர்களாகிய நாம் பெறுகின்றோம்.  

இத்திருத்தலம் எங்கிலும் மிகவும் அழகிய சிற்பவேலைப்பாடுகளுடனான தூண்கள் காணப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் விநாயக புராண இதிகாசக்கதைகளைப்  பறைசாற்றும், பிரதிபலிக்கும் பலவகைபட்ட சிற்பங்களுடன் கூடிய, அழகிய கண்கவர் பிரமாண்டமான தூண்களையும் கூரை முகப்புக்குளுக்கு கீழ் கண்களைக் கவரும் அல்லது கட்டிஈக்கும் புராண இதிகாசக்கதைகளைச் சித்தக்கும்  அழகிய வர்ணங்கள் தீட்டப்பட்ட சிற்பங்களை உள்ளடக்கியதாக   இத்திருத்தலம் எங்கும் எம்மால் காணமுடிகிறது. .

திருத்தல விருட்சத்தைச் சுற்றிக்கூட அழகிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் மெருகூட்டப்பட்ட கட்டுமான அமைப்பொன்றை எம்மால், கண்டு  பிரமிக்கக்கூடியதாக இருக்கின்றது.

 ஆன்மாவின் முதிர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் மலர்ந்த தாமரை மலர்கள், செவ்வனே  கூரை முகப்பில் செதுக்கப்பட்டு வர்ணங்கள்; தீட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட எழில்மிகு சிற்பங்களினாலும் இத்திருத்தல  முகப்பு வாசயில் மண்டபம் உட்பட, திருத்தலம் எங்கிலும்  சகல கூரை முகப்புக்களிலும், அலங்காரங்கள் செறிந்தும் நிறைந்தும் மலிந்தும் காணப்படுகின்றன. மேலும் விநாயகப் பெருமானின் பல அவதார அம்சங்கள் இத்திருத்தலத்தில் நிறைந்தும் செறிந்தும் செவ்வனே செதுக்கப்பட்டு கண்கவர் உயர்ரக வர்ணப்பூச்சுக்களினால்; தீட்டப்பட்டுள்ளமையை அடியவர்களாகிய எம்மால் காண்டு பூரிப்படைய முடிகின்றது. 

திருத்தல உட்பிரகாரம் 

ராஜகோபுரத்தினூடாக இத்திருத்தலத்தினுள் நுழையும் போது, மூலவரான விநாயகப்பெருமானை வழிபடும் பெரும்பேற்றையும் அரும்பாக்கியத்தையும்  அடியவர்களாகிய நாம் ஒருங்கே பெறுகிறோம். 

அவ்வாறே, வலது புறத்தில் துவார கணபதியை வழிபடும் வாய்ப்பினையும்;, இடது புறத்தில் தண்டாயுதபாணியினையும்;, மற்றும்  துவார கணபதி சன்னிதானத்திற்கு அடுத்தாற்போல்  மேற்கு  நோக்கியதாக இடும்பன் சன்னிதானத்தையும் நாம்  ஒருங்கே காண்கின்றோம்;. மேலும், திருத்தலத்திற்குள்ளே, கிழக்கு நோக்கிய எமது பயணத்தின்போது  வடக்குத்திசையில் தெற்கு நோக்கியதாக வசந்த மண்டபத்தையும்;, மேலும்  அதே திசையில் தெற்கு நோக்கியதாக பைரவப் பெருமான் சன்னிதானத்;தையும், தெற்கு நோக்கிய மீனாட்சி அம்மையார் சன்னிதானத்தையும் ஒரே நேர்வரிசையில் காணும் பெரும் பேற்றையும் அரும் பாக்கியத்தையும் அடியவர்களாகிய  எம்மால் பெறமுடிகிறது. 

மேற்கு நோக்கிய சிவன் சன்னிதானத்தில்,   சுந்தரேசப்பெருமானாக சிவன் மேற்கு நோக்கி விற்றிருப்பதை  எம்மால் கண்டு வழிபட முடிகின்றது. அத்துடன், நவக்கிரக சன்னிதானம் தனியாக அதே உட்பிரகாரத்தில் அமைந்துள்னமையை நாம் காணமுடிகிறது. இவ் நவக்கிரக திருத்தலத்திற்கு அண்மையில் தட்சணாமூர்த்தி சன்னிதானத்தையும் காணும் பேற்றை அதே பிரகாரத்தில் நாம் பெறுகின்றோம்.  

மேலும், தெற்குத்திசையில் வடக்கு நோக்கி துர்க்கையம்மன் சன்னிதானத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி அருள்பாலித்த வண்ணம் உள்ளதை எம்மால் காணமுடிகிறது. 

வேல் திருவிழாவில் பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருத்தல்தின் பங்களிப்பு 

இத்திருத்தலத்தில் இடம்பெறும் மிகமுக்கியமானதும் சிறப்பானதமான திருவிழா ஆடிவேல் விழாவாகும். வருடந்தோறும் தவறாமல் இத்திருத்தலத்தில் இடம்பெற்றுவருவது வழமையாகும்.  

வேல் திருவிழாவின்போது  இக்குறிப்பிடப்பட்ட   தேர்  திருவிழாவானது காவடித் தேர் திருவிழா என அழைக்கப்படுகிறது.  புறக்கோட்டை முதலாம்; குறுக்குத்தெரு  ஸ்ரீ சாமாங்கோடு கதிர்வேலாயுத ஆலயம், மற்றும் கொழும்பு ஸ்ரீ சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயங்களில்   இத் தேர் திருவிழா வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும்  நடைபெறுகின்றது.

இவ்விரு திருத்தலங்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ்; இயங்கி இடம்பெற்று வருவதால் இத்தேர் திருவிழாவின் ஒருங்கிணைப்புப் பணிகள், மிகச்சிறப்பாக இடம்பெறுகின்றன என்பது பாரட்டுதலுக்குரியதாகும். இத்திருத்தலத்தின் காவடி வேல் தேரானது ஸ்ரீ சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி கோயில், இலக்கம் 141, முதலாம் குறுக்குத் தெரு கொழும்பு 11இல் இருந்து  புறப்பட்டு  பம்பலப்பிட்டி  காலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்மாங்கோடு மாணிக்க விநாயகர், திருத்தலத்தை வந்தடையும். இத்தேரில் முருகன் வள்ளி தெய்வானை சமேதரராக மூர்த்திகள் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பர்.

பம்பலப்பிட்டி  ஸ்ரீ சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் திருத்தலத்தில்; நான்கு நாட்கள் தெய்வங்கள் எழுந்தருளி விற்றிருக்கின்றன. தமிழ் மாதமான ஆடிப் பௌர்ணமி தினத்தன்று வெள்ளவத்தை கடலில் நீர் வெட்த்திருவிழாவுடன்  (தீர்த்த உற்சவத்துடன்)  காவடி வேல் திருவிழா  இனிதே நிறைவடைகின்றது. இதனை அடுத்து   மீண்டும் கொழும்பு   முதலாம்; குறுக்குத் தெரு ஸ்ரீ சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி திருத்தலத்திற்;கு தேர் புறப்பட்டு வருவது வழமையாகும். இந் நான்கு நாட்களிலும் தென்னிந்திய பாரம்பரிய நாதஸ்வரம் மற்றும் தவில் வல்லுனர்கள் மற்றும் சிறந்த  தென் இந்திய இசைக் கலைஞர்கள் கச்சேரிகளை வெகு விமரிசையாக  அள்ளி வழங்குவர். இந்த நான்கு நாட்களும் கோயிலில் அன்னதானம் சகல அடியவர்களுக்கும் இனிதே வழங்கப்படுகின்றது.

வேல்விழாவின் போது சாலையின் இரு மருங்கிலும்  இந்து மற்றும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பல்வேறு பக்தர்கள், வணிக  வர்த்தக சமூகத்தினர், பக்தி சிரத்தையுடன்   வேல் ரதத்தை  வரவேற்பர். வேல் ரதம் எப்போதும் மஞ்சள் நிற மின்; குமிழ்கள், புதிய மலர் மாலைகள், குருத்துத் தென் ஓலைகள், தோரண அலங்காரம், பழுத்த மஞ்சள் வாழைப்பழக் குலைகளுடன் வாழை மரங்களாலும்  அலங்கரிக்கப்படுகின்றன.

வேல் ஊர்வலத்தில் காவல் தெய்வமான இடும்பனுக்கு தனி இடம் பெறவதைக் காணமுடிகின்றது. வேல் தேருக்கு முன்னால் இடும்பன் காவல் தெய்வமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழமை. இடும்பன் தெய்வத்திற்கான இறுதி பூஜையுடன் வேல் திருவிழா சம்பிரதாய பூர்வமாக நிறைவு பெறுகிறவது வழமையாகும். மேலும் இத்திருத்தலத்தில் இந்து நித்திய நைமித்திய கிரியைகள் யாவும் மிகவும் ஒழுங்காகவும் சிறப்பாகவும் இடம்பெறுகின்றன.  

கலாநிதி சுபாஹிணி பத்மநாதன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதானி சீமேந்து நிறுவனத்தின் வியக்கவைக்கும் துர்கா...

2026-10-12 16:32:57
news-image

இன்று மகாளய அமாவாசை

2026-10-10 13:34:02
news-image

காரைநகரில் சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா

2026-09-23 17:24:25
news-image

கொட்டும் மழையில் கொட்டகலை வாவியில் 17...

2026-09-21 15:49:12
news-image

17 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை மீனாட்சி...

2026-09-17 11:47:34
news-image

12,000 வலம்புரி சங்குகள் முதல் மணல்...

2026-09-14 15:43:34
news-image

பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2026-09-08 10:11:49
news-image

இசையும் நடனமும் சங்கமித்த "வானவில்" :...

2026-08-31 15:33:32
news-image

முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம்

2026-08-12 12:15:37
news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06