தமிழ் வானொலி வரலாற்றிலே பல புதுமைகளைப் படைத்து தனித்துவமான புதிய படைப்புகளின் முன்னோடியாக, தமிழ் பேசும் மக்களின் சக்தியாக விளங்கும் சக்தி FM, வானொலி நிகழ்ச்சிகளை மட்டும் வழங்காமல் சமூக, சமய, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பேணும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து ஊடக வரலாற்றில் தனது தனித்துவமான பங்களிப்பை வழங்கிவருகிறது.
நம்நாட்டுக் கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது சக்தி FM.
வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் என நாற்றிசையும் இருக்கும் மக்களோடு இணைந்து அவர்களுடைய மண் வாசனையை வெளிப்படுத்தும் பல்வேறு கலைவடிவங்களுக்கு உயிர் கொடுத்து அவற்றை சர்வதேச தரத்திற்கு கொண்டு சேர்த்ததும் சக்தி.
அந்தவகையில் யாழ் மண்ணிற்கு மட்டுமின்றி இலங்கைத் திருநாட்டிற்கே பெருமை சேர்க்கும் ஆலயமாக விளங்கும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ காலத்தில் நல்லூரில் பிரம்மாண்டமான சிறப்புக்கலையகம் அமைத்து நேரடி நிகழ்ச்சிகளை வழங்கி உலகில் வாழும் தமிழ் பேசும் மக்களை ஒருங்கிணைத்த பெருமை சக்தியையே சாரும்.
2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வெரு வருடமும் பல்வேறுபட்ட கலையம்சத்துடன் கூடிய பிரம்மாண்டமான கலையகம் அமைத்த சக்தி இம்முறை யாழ் மண் இதுவரை கண்டிராத எல்லோரும் வியந்து பார்க்குமளவிற்கு பிரம்மாண்டப் படைப்பாக கந்தன் திருக்கூடத்தை அமைத்துள்ளது. இது இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி உலகத் தமிழ் வரலாற்றில் முதன் முறையாக அமையும் சிறப்புப் படைப்பாக விளங்கும்.
ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மின் விளக்குகளுடன் கூடிய அலங்காரத்துடன் கந்த புராணத்தை ஒலி ஒளி வடிவில் உங்கள் கண்முன்னே கொண்டு வந்து உங்கள் உள்ளத்துக்கு ஒரு புதவித விருந்தை தரப்போகிறது கந்தன் திருக்கூடம். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாய் இந்த கந்தன் திருக்கூடம் அமைவதுடன் அனைவருக்கும் ஒரு புதுவகையான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இம்மாதம் 05ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நல்லூர் ஆலய பின்புற பருத்தித்துறை வீதியில் சக்தியின் கந்தன் திருக்கூடம் அமைகிறது. நேரடியாக நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளையும் சக்தி குஆ நேயர்களுக்கு வழங்குகிறது.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நல்லூரான் சக்தி நாடெங்கும் பரவட்டும்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM