(எம்.மனோசித்ரா)
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்ற தவறிழைப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் 'இம்பேக்ட் ஸ்டோரிஸ்' (Impact Stories) ஊடகத்திற்கு வழங்கிள்ள விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச ரீதியில் தனக்கு தடைகள் விதிக்கப்பட்டதன் அடிப்படையை கேள்விக்குட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைப் படைப்பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொழில்முறை ரீதியாகப் போரிட்டதாகவும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க முயன்றதாகவும் அவர் குறித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,'சர்வதேச ரீதியில் எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அண்மையில் ஐக்கிய இராச்சியத்தாலும் எனக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகள் எதற்காக? நான் என்ன தவறு செய்தேன்? நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன்' என ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM