இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகப்பூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை (08) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
38 வருடங்களுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தையொட்டி கொழும்பு நகரைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM