(செ.சுபதர்ஷனி)
டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் என அறியப்படும் லலித் கண்ணங்கர எனும் ‘பஸ் லலித்’ வழங்கிய தகவலின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றிலிருந்து ரி-56 ரக துப்பாக்கி உட்பட 3 துப்பாக்கிகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
பஸ் லலித் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டதை அடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவல் ஒன்றுக்கமைய அதிகாரிகள் குழுவினர் ஹங்வெல்ல மயானத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து துப்பாக்கிகளை மீட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது ஒரு ரி-56 ரக துப்பாக்கி, ஒரு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீட்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM