இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில் அதிக ஆயுதமோதல்கள் - இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புமாறு அரசுகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் அறைகூவல்

Published By: Vishnu

08 Sep, 2026 | 06:17 AM
image

(நா.தனுஜா)

இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் அண்மையகாலத்தில் உலகம் அரசுகளுடன் தொடர்புடைய மிக அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்களுக்கு முகங்கொடுத்துவருவதாக கரிசனை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தற்போதைய உலகளாவிய நிலைவரம் மிக ஆபத்தானதாகவும், கவலை அளிப்பதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் திங்கட்கிழமை (7) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், அண்மைய சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் ஆயுதமோதல்களுக்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களின் பிரகாரம் செயற்படாமை மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளின் பிரகாரம் செயற்படுவதற்கான கடப்பாட்டில் ஏற்பட்டுள்ள பலவீனம் என்பன முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய ரீதியில் தற்போது குறைந்தபட்சம் ஒரு அரசையேனும் உள்ளடக்கிய 60 க்கும் மேற்பட்ட மோதல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், அரசுகளுக்கு இடையிலான நேரடி மோதல்களில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு சர்வதேச சமூகத்தை மிக ஆபத்தாக பாதையை நோக்கி நகர்த்திச் செல்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள மோதல்கள் தொடர்பில் கவலை வெளியிட்ட அவர், இந்த மோதல்கள் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் பாதிப்பதாகவும், அனைத்து உலகநாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூகோள அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளைத் தோற்றுவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த மோதல்களால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் தவிர்க்கப்படக்கூடியவை என்றும், சம்பந்தப்பட்ட அரசுகள் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நோக்கி உடனடியாகத் திரும்பவேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59