22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தமது மனு பரிசீலிக்கப்படாமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் புதிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

Published By: Vishnu

08 Sep, 2026 | 06:03 AM
image

(செ.சுபதர்ஷனி)

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தித் தாம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க ஆகியோரினால் உயர்நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, துலார குணதிலக்க என்பவரால் உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த மனு விசாரணைக்காகத் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவில்லை என  மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாகத் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர். அத்துடன், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, 22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்ட மூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின்  வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுத்து இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59