‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன் ரூபா வைப்பு: பிரதீப் காரியவசமிடம் வாக்குமூலம் பெற உத்தரவு

Published By: Vishnu

08 Sep, 2026 | 05:45 AM
image

(செ.சுபதர்ஷனி)

மகரகம அபேக்ஷா தேசிய புற்றுநோய்  வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனர் இயந்திர கொள்வனவுக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட ஒரு மில்லியன் ரூபா நிதியை, ‘சிரிலிய சவிய’ அறக்கட்டளையினால் பராமரிக்கப்பட்டு வந்த வங்கிச் கணக்கில் வைப்பிலிட்டமை தொடர்பில், தனியார் வங்கி ஒன்றின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

‘சுக உதான’ என்ற திட்டத்தின் ஊடாக  இந்த நிதி நன்கொடை கோரப்பட்டிருந்த போதிலும், குறித்த நிதி சிரிலிய சவிய கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்ததை அடுத்து, சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். குறித்த பெட்  ஸ்கேனர் இயந்திரம் சீனாவிலிருந்து தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்குவதற்குத் தயாராக இருந்த நிலையில், அவ்வியந்திரத்தைக் கொள்வனவு செய்வதாகக் கூறி இவ்வாறு நன்கொடைகள் திரட்டப்பட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த பெட் ஸ்கேனர் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும், சுக உதான திட்டத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நிதி சிரிலிய சவிய கணக்கில் வைப்பிலிடப்பட்டமை தெரியவந்துள்ளது. இதுவொரு நம்பிக்கை மோசடியாக இருக்கலாம் என  விசாரணை அதிகாரிகளல் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பெட் ஸ்கேனரைக் கொள்வனவு செய்வதாகக் கூறி பல தனியார் வங்கிகளிடமிருந்தும் நன்கொடைகள் கோரிப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உபகரணம் நன்கொடையாகக் கிடைக்கவுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும், அதனைக் கொள்வனவு செய்வதாகக் கூறி நன்கொடைகளைத் திரட்டியதன் மூலம் நிதி மோசடி ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஒரு வாரத்திற்குள் அது தொடர்பான அறிக்கையைச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறும்,  தனியார் வங்கி ஒன்றின் முன்னாள் பிரதீப் காரியவசம் என்பவரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59