எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான சேவைகளை இரத்து செய்தது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்

Published By: Vishnu

08 Sep, 2026 | 01:09 AM
image

(எம்.மனோசித்ரா)

இந்தோனேசியாவின் அனாக் கிராக்கடாவ் எரிமலையிலிருந்து வெளிப்படும் அபாயகரமான சாம்பல் மேகங்கள் காரணமாக, கொழும்புக்கும் ஜகார்தாவுக்கும் இடையிலான நேற்றைய அனைத்து விமானச் சேவைகளையும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் இரத்து செய்திருந்தது.

அதற்கமைய கொழும்பிலிருந்து ஜகார்தா செல்லும் UL364 மற்றும் ஜகார்தாவிலிருந்து கொழும்பு திரும்பும் UL365 ஆகிய இரு வழக்கமான விமானச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. எரிமலையிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் மற்றும் சிலிக்கா துகள்கள் அப்பகுதியின் வான்வெளியில் பரவியுள்ளதால், விமான என்ஜின்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜகார்தாவின் சுகர்ணோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களின் செயல்பாடுகளை இந்தோனேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். மேலும், இலங்கை நோக்கிய பாதிக்கப்பட்ட மேற்கு வான்வழிப் பாதை வழியிலான விமானப் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டதைத் தொடர்ந்து இந்த இரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடு முழுவதும் பொலிஸ் விசேட நடவடிக்கை...

2026-10-10 17:12:39
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01