மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ஒருவர் கைது கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்பு

Published By: Vishnu

08 Sep, 2026 | 01:00 AM
image

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும்  இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராசா றஜிக்காந்தனுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான திங்கட்கிழமை (7) ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47