22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி – மைத்ரி குணரத்ன

Published By: Vishnu

07 Sep, 2026 | 09:29 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

ஜனாதிபதியின் அண்மைய உரையினால் 22ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது உறுதியாகிறது என பிரீ  லேயர்ஸ் அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி மைத்ரி குணரத்ன விசனம் வெளியிட்டார்.

22ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகள், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் என்பன குறித்து சுதந்திர இயக்க மையம் மற்றும் பிரீ லேயர்ஸ் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினர்களிடையே பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (07) விசேட சந்திப்பு இடம்பெற்றது.

சுந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கவனிக்கும்போது, 22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் நேற்றைய உரையிலிருந்து இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் எந்தவிதத் தடையுமின்றி நிறைவேற்றப்படுவது என்பது உறுதியாகிறது. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து எமக்குச் சில நியாயமான சந்தேகங்கள் இருந்தன. ஆனால், நேற்றைய ஜனாதிபதியின் உரை அதனை நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் பாராளுமன்றத்துக்கு வந்து, அதன் மூலம் நீதித்துறையின் நீதிபதிகளின் உத்தியோகபூர்வ காலம் இரண்டு வருடங்களால் நீடிக்கப்படுமாகின், அது இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தினை சீர்குலைப்பதாகவே அமையும்.

அதனால்தான் நாம் அதற்கு எதிராக நிமிர்ந்து நிற்கிறோம், மக்களை விழிப்புணர்வு ஊட்டுகிறோம். துரதிஷ்டவசமாக மக்கள் இது குறித்து முழுமையாக விழிப்புணர்வு பெறவில்லை. எனவே, மக்களை விழிப்புணர்வு ஊட்டுவதன் மூலமே நாட்டின் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என்ற உண்மையை அவர்களுக்குப் புரியவைக்க நாம் தீவிரமாகத் திட்டமிட்டுள்ளோம்.

இன்று ஒரு கட்சியாக இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அழிவு, நாட்டின் ஜனநாயகம், மக்களின் சுதந்திரம், கருத்துரிமை என்பவற்றுக்குத் தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு வரும் இந்த அழிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஐக்கியம் தொடர்பில் நாம் அவர்களுக்கு ஆரம்பக் காலத்திலிருந்தே ஒரே நிலைப்பாட்டில் இருந்ததாகத் தெளிவுபடுத்தினோம். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுத்ததும் நாங்கள்தான் என்பதையும், எதிர்காலத்திலும் அத்தகைய அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எமது ஒப்புதலும் ஒத்துழைப்பும் முழுமையாக உண்டு என்பதையும் நாம் அவர்களிடம் எடுத்துரைத்தோம்.

எதிர்க்கட்சிகளுடன் நாம் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில், பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தலைமையிலான குழு இதற்குத் தமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் நின்றுவிடாமல், வீதிக்கு இறங்கி நடத்தும் எந்தவொரு போராட்டத்துக்கும் தாங்கள் இணைந்துகொள்வதாகவும் தெரிவித்தனர். அதேபோல், எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை சுதந்திர இயக்க மையமான நாம் செய்ய வேண்டும் என்ற சிறப்புக் கோரிக்கையையும் அவர்கள் விடுத்தனர். கட்சிகளுக்கிடையிலான பாலங்களை அமைக்கும் பணியை எம்மால் செய்ய முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். அந்தப் பாலங்களை அமைத்து இந்தப் போராட்டத்தை வீதிக்குக் கொண்டு செல்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதுடன், இதற்குத் தமது முழுமையான ஆதரவையும் வழங்குவதாக உறுதிப்படுத்தினர்.

எமக்கு எதிராகக் கொண்டுவரக்கூடிய குற்றச்சாட்டுகள் மிகக் குறைவானவை அல்லது அத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை. குற்றச்சாட்டுகள் இல்லாத காரணத்தினால்தான் எங்களால் இந்தப் போராட்டத்தை முன்னோக்கி வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். நாட்டுமக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28