தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ், கலம்போ எவ்சி நாளை நேருக்கு நேர் மோதுகின்றன

Published By: Vishnu

07 Sep, 2026 | 08:29 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் இதுவரை தோல்வி அடையாத அணிகளாக இருக்கும் அப்கன்ட்றி லயன்ஸ் அணிக்கும் கலம்போ எவ்சி அணிக்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை (08) நடைபெறவுள்ள போட்டி ஆதிக்கத்திற்கான போராக அமையவுள்ளது.

அப்கன்ட்றி லயன்ஸ், தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. இந்த 7 போட்டிகளில் 31 கோல்களைப் போட்டுள்ள அப்கன்ட்றி லயன்ஸ், 3 கோல்களை மாத்திரமே விட்டுக்கொடுத்துள்ளது.

இந்தப் போட்டி முடிவுகளுக்கு அமைய அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் எத்தகைய ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது என்பது தெட்டத் தெளிவாகிறது.

மேலும் இந்த அணியில் இடம்பெறும் ஒவ்வொரு வீரரும் மிகத் திறமையாகவும் சிறந்த புரிந்துணர்வுடனும் விளையாடி வருவது அணிக்கு போனஸாக அமைகின்றது. மேலும் அவர்களது வேகம் எதிரணிக்கு சிரமத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

அதேவேளை, கலம்போ எவ்சி கழகம் தோல்வி அடையாத அணியாக இருக்கின்றபோதிலும் அதன் பெறுபேறுகள் எதிர்பார்த்தளவுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

தனது 7 போட்டிகளில் 4 வெற்றிகளை ஈட்டிய கலம்போ எவ்சி, 3 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது. இந்த 7 போட்டிகளில் 12 கோல்களைப் போட்டுள்ள கலம்போ எவ்சி, ஒரு கோலை மாத்திரமே விட்டுக்கொடுத்துள்ளது.

முதல் 6 போட்டிகளில் ஒரு கோலைத்தானும் விட்டுக்கொடுக்காமல் இருந்த கலம்போ எவ்சி கோல்காப்பாளர் மொஹமத் இம்ரான், கடைசிப் போட்டியில் எதிர்பாராத விதமாக ஒரு கோலை விட்டுக்கொடுத்தார்.

இரண்டு அணிகளினதும் இந்த பெறுபேறுகளை ஒப்பிடும்போது அப்கன்ட்றி லயன்ஸ் பலம்வாய்ந்த அணியாகவும் வெற்றி பெறுவதற்கான அனுகூலமான அணியாகவும் தென்படுகின்றது. 

ஆனால், அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலரை தன்னகத்தே கொண்டுள்ள கலம்போ எவ்சி புத்திசாதுரியத்துடன் விளையாடினால் அக் கழகம் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

இப் போட்டியில் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற குறிக்கோளுடன் இரண்டு அணிகளும் களம் இறங்குவதால் இந்தப் போட்டி மற்றைய எல்லா போட்டிகளையும் விட மிகச் சிறந்த, பரபரப்பும் விறுவிறுப்பும் மிக்க போட்டியாக அமையும் என்பது உறுதி.

இந்த இரண்டு அணிகளில் எந்த அணி நிதானத்துடனும் புத்திசாதுரியத்துடனும் விளையாடுகின்றதோ அந்த அணியே இறுதியில் வெற்றிபெறும் என எதிர்வு கூறப்படுகிறது. 

அதேவேளை, இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28