நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத் தவறவிட்ட சீ ஹோக்ஸ் 2 - 0 என வெற்றிபெற்று சுப்பர் சிக்ஸுக்குள் நுழைந்தது

Published By: Vishnu

07 Sep, 2026 | 08:19 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற நியூ யங்ஸ் கழகத்துக்கு எதிரான சுப்பர் லீக் சம்பியன்ஷிப் போட்டியில் ஏகப்பட்ட கோல்களைத் தவறவிட்ட சீ ஹோக்ஸ், ஒருவாறு 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.

இப் போட்டியின் முதலாவது பகுதியில் 9 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்ட சீ ஹோக்ஸ் அணி அதன் பின்னர் ஏகப்பட்ட கோல்களைத் தவறவிட்டது.

அவ்வணியின் நான்கு முயற்சிகள் கோல் குறுக்குக் கம்பத்தில் பட்டதுடன் இன்னும் இரண்டு முயற்சிகள் கோல் தூணில் பட்டு வெளியேறின.

நியூ யங்ஸின் கோல் வாயிலில் குறைந்தது மேலும் 4 கோல்களை சீ ஹோக்ஸ் தவறவிட்டது.

சீ ஹோக்ஸ் அணி வீரர்கள் கோல்களைத் தவறவிட்டதால் போட்டியில் சுவாரஸ்யம் அற்றுப் போனது.

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் மொஹமத் குர்ஷித் முதலாவது கோலைப் போட்டு சீ ஹோக்ஸ் அணியை முன்னிலையில் இட்டார்.

ஒன்பது நிமிடங்கள் கழித்து சீ ஹோக்ஸின் 2ஆவது கோலை எசெக்கியெல் பெட்றிக் போட்டார்.

அதனைத் தொடர்ந்து சீ ஹோக்ஸ் அணியினரிடம் பெருமளவில் பந்து இருந்தபோதிலும் கோல் போடக் கிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்டனர்.

இந்த வருட சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிகப்படியான கோல்களைத் தவறவிட்ட அணி சீ ஹோக்ஸ் என்று கூறினால் தவறாகாது.

இறுதியில் சீ ஹோக்ஸ் வெறும் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சுப்பர் சிக்ஸில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

சுப்பர் சிக்ஸில் இதுவரை 5 அணிகள்

திங்கட்கிழமை போட்டி முடிவுடன் அப்கன்ட்றி லயன்ஸ், றினோன், கலம்போ எவ்சி, ரெட் ஸ்டார், சீ ஹோக்ஸ் ஆகிய ஐந்து அணிகள் சுப்பர் சிக்ஸில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆறாவது அணி நடப்பு சம்பியன் புளூ ஸ்டாரா? புளூ ஈக்ள்ஸா? என்பது அடுத்த வாரம் நடைபெறவுள்ள போட்டி முடிவுகளிலிருந்தே தெரியவரும்.

இந்த இரண்டு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் சம நிலையில் இருக்கின்றன. ஆனால், நேருக்கு நேர் போட்டி முடிவுக்கு அமைய புளூ ஸ்டார் (3 - 1) முன்னிலையில் இருக்கிறது.

எனவே, இந்த இரண்டு அணிகளும் தத்தமது கடைசிப் போட்டிகளில் வெற்றிபெற்றால் புளூ ஸ்டார் சுப்பர் சிக்ஸில் விளையாட தகுதிபெறும்.

இது இவ்வாறிருக்க, புளூ ஸ்டார் - ரட்னம், புளூ ஈக்ள்ஸ் - சீ ஹோக்ஸ் ஆகிய இரண்டு போட்டிகளை ஏககாலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுப்பப்பட்ட  வண்ணம் உள்ளது. 

இது குறித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அடுத்த ஓரிரு தினங்களில் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28