• அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம்
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

தித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அதற்கான அரசாங்கத்தின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தெளிவுபடுத்தினார்.
அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகவும் மார்க் என்ட்ரூ இதன்போது குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பங்குதாரர் மற்றும் அபிவிருத்தி நிதியியல் நிபுணர் அஸாம் பாக்கீர் மாகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான மற்றும் தாங்கும்திறன் தொடர்பான அதிகாரி வகீஷா பெரேரா ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM