(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அது அரசாங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும். அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்கே நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை இல்லாமலாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என பொதுஜன கெரமுன பாராளுமன்ற உறுப்பினர். டி.பி சானக்க தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் திங்கட்கிழமை (7) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் அரசாங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாகும். ஏனெனில் இவர்களுக்கு வேலை தெரியாது. நாட்டில் அபிவிருத்தி செய்ய முடியாதவர்களுக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் இவர்கள் மேற்கொண்டுவரும் ஒரே நடவடிக்கை சுயாதீன நிறுவனங்களை அடக்குவதாகும்.
ஆரம்பமாக பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தை இல்லாமலக்கினார்கள். அதாவது தேசிய மக்கள் சக்தியைச் சேர்த்த இரண்டுபேரை பொலிஸ் திணைக்களத்தின் செலாளராகவும் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் இணைத்துக்கொண்டார்கள்.
தற்போது நீதித்துறைக்கு அரசியல் தலையீடு மேற்கொள்ள முயற்சிக்கிறார்கள். என்றாலும் மகக்ள் தற்போது இவர்களின் நடவடிக்கைகளை விளங்கி இருக்கிறார்கள். ஏகாதிபத்திய நடவடிக்கை ஒன்றுக்கே இவர்கள் தயாராகி வருகிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
அதனால் மக்கள் நீதிமன்றில் இவர்களின் அனைத்து திட்டங்களையும் தோற்கடிக்க மக்களுடன்இணைந்து வீதிக்கிறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நீதிமன்ற சுயாதீனத்தில் கை வைப்பது என்பது அரசாங்கத்துக்கு அது பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்கம் தனது இயலாமையை மறைத்துக்கொள்ளவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் தங்களின் உற்பத்திக்கு நியாயமான விலையை வழங்குமாறு தெரிவித்து வருகிறார்கள். இவை எதனையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் நீதித்துறையின் சுயாதீீனத்தை இல்லாமலாக்கும் 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து, அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM