குருநாகல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்ய முயன்ற மூவருக்கு நீதிமன்றம் ரூபா 525,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், வடமேல் வனவிலங்கு உதவி இயக்குநர் அலுவலகம், ரிதிகல வனவிலங்கு மண்டல பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குறுநாகல் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போது குருநாகல், மல்கடுவாவ பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பின்வரும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன:
சரோனியா டிரைடோனிஸ் (Charonia tritonis): அரிதான ட்ரைட்டன் சங்கு ஓடு.
டுடுஃபா பூபோ (Tutufa bubo): அரிதான தவளை சங்கு ஓடு.
கடல் உயிரின ஓடுகள்: பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் பிற பாகங்கள்.
போன்ற உயிரினங்களின் பாகங்களை வைத்திருந்தமை, விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை வியாபாரத்தில் ஈடுபட முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த குருநாகல் நீதவான், குற்றவாளிகள் மூவருக்கும் தலா 175,000 வீதம் மொத்தம் 525,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், கைப்பற்றப்பட்ட கடல்வாழ் உயிரின ஓடுகள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி என்பனவற்றை அரசாங்கப் பொறுப்பேற்று வனவிலங்கு பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM