'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா' வெட்டிக் கொலை!

07 Sep, 2026 | 05:39 PM
image

தெஹிவளை பகுதியில் இன்று திங்கட்கிழமை (07)  இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், பாதாள உலகச் கும்பலைச் சேர்ந்த 'கொஸ் மல்லி' என்பவரின் மைத்துனரான 'பூத களுவா' என அழைக்கப்படும் நபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெஹிவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை, ஓபன் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர், பாதாள உலகக் கும்பல் தலைவனான 'கொஸ் மல்லி' என்பவருடன் பல ஆண்டுகள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பே இலங்கை திரும்பியுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த நான்கு பேரடங்கிய கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

பலத்த காயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இக் கொலையானது மற்றொரு பாதாள உலகக் குழு உறுப்பினரான "படோவிட்ட அசங்க" என்பவரின் தரப்பினரால் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47