நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE'  படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

07 Sep, 2026 | 05:00 PM
image

தமிழ் சினிமாவில் பேசும் சவால் கொண்ட மாற்று திறனாளி நடிகையான அபிநயா ஆனந்த் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹோப்- HOPE எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஹோப் ' திரைப்படத்தில் அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன், ராஜேஸ்வரி, ரிதன், ஜெய், ப்ரீத்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலி ஃப்ரான்சிஸ் இசையமைத்திருக்கிறார். தற்கொலை எண்ணத்தை தவிர்த்து வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விழிப்புணர்வு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரைபாட் ட்ராவல்  டி ஹெச் எப் ஃபிலிம் கொர்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வட இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தலமான சிம்லாவில் நடைபெறும் 12 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள், நெருக்கடியும், அழுத்தமும் உண்டாக்கும் தருணங்களில் வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையை உணர்த்துவதால் ரசிகர்களிடம் பாரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39