நடிகர் ரிஷிகாந்த், நடிகை அனிஷ்மா அனில் குமார் ஜோடி திரையில் கொண்டாடிய 'மொத ராத்திரி' திரைப்படம் கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து பெற்று, வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழு படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதற்கான பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் அனைவரும் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசுகையில், '' இப்படத்தின் கதையை ஆறாண்டுகளாக எம்முடன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
கதையை கேட்ட பல தயாரிப்பாளர்கள் நாயகனாக நடிக்கும் ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்கள்.
ஆனால் ரிஷிகாந்த் இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அற்புதமான மண் மணம் மாறாத நாயகன் கிடைத்துவிட்டார் என திரை உலகினர் கொண்டாடுகிறார்கள்.
இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களின் பேராதரவு தேவை. இவை மட்டும்தான் தமிழ் சினிமாவை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லும்'' என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM