நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா - DADA ' படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

Published By: Digital Desk 2

07 Sep, 2026 | 04:46 PM
image

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்திற்கு, 'டாடா 'என பெயரிடப்பட்டு, அதற்கான அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'டாடா - DADA' திரைப்படத்தில் பாலகிருஷ்ணா, மஞ்சு மனோஜ், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சரத்குமார், அபிமன்யு சிங், உபேந்திரா லிமயே, மனிஷ் வாத்வா, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் பாலகிருஷ்ணாவின் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்