தமிழ் திரையுலகத்தில் எளிய மக்களின் நாயகனாக கொண்டாடப்படும் 'மக்கள் நாயகன்'ராமராஜனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்ததில் 'இசை ஞானி' இளையராஜாவின் தனித்துவமான கிராமிய பாடல்களுக்கு பாரிய அளவில் பங்களிப்பு உண்டு என்பதுதான் வரலாறு.
அந்த வகையில் மீண்டும் 'இசை ஞானி' இளையராஜாவும் 'மக்கள் நாயகன்' ராமராஜனும் இணைந்து பணியாற்றும் 25 ஆவது திரைப்படமாக 'கடவுள் தந்த பரிசு' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும்' கடவுள் தந்த பரிசு' திரைப்படத்திற்கு ராஜகோபால் மற்றும் எம் .அடைக்கலம் ஆகிய இருவரும் வசனம் எழுதுகிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் ராமராஜன் உடன் செந்தில்-கோவை சரளா ஜோடி இணைகிறது. இதன் மூலம் இத்திரைப்படத்தின் நகைச்சுவை மீண்டும் பேசப்படும்.
'கடவுள் தந்த பரிசு' திரைப்படத்தின் பணிகள் பாடல் பதிவுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'சாமானியன்' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் ராமராஜன் - தனக்கு திரையுலக வெற்றிகளை வாரி வழங்கிய இசை ஞானி இளையராஜா உடன் இணைந்திருப்பதால், இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே ஏற்பட தொடங்கியுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM