நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Published By: Digital Desk 2

07 Sep, 2026 | 04:24 PM
image

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இளைய வாரிசான நடிகர் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் மணி சேயோன் இயக்கத்தின் உருவாகும் இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கிறார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல் கே சதீஷ் தயாரிக்கிறார்.

கேப்டன் சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் பத்தாவது திரைப்படமாக தயாராகும் இத்திரைப்படத்தின் தொடக்க விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கமெராவை ஆன் செய்ய, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடித்து பாரம்பரியமான படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் டொக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர்கள் இளவரசு, தம்பி ராமையா, 'பட்டிமன்றம்' ராஜா, நடிகைகள் 'மைனா' நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பிரகதி, காயத்ரி, விநியோகஸ்தர் படூர் ரமேஷ், இயக்குநர் திரு, ஒளிப்பதிவாளர் அர்வி உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்து வரும் 'வாண வேடிக்கை' படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சண்முக பாண்டியன் நடிப்பில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39