தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியீடு

Published By: Digital Desk 2

07 Sep, 2026 | 04:24 PM
image

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நடிகருமான மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கான அறிமுக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். 

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ்,  ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ், அஜ்மத் ஜக்மக், ஷ்ரத்தா அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சியா@பர்மா கார்த்திகேயன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மம்முட்டியின் அறிமுக காணொளியை அவரது பிறந்த நாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். 

இதில் மம்முட்டியுடன் தனுஷும் இறுதியில் இணைந்து தோன்றுவதால் இதற்கான வரவேற்பு இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்