இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி' படத்தின் படப்பிடிப்பு

Published By: Digital Desk 2

07 Sep, 2026 | 04:24 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளான பிரியங்கா மோகன்-  கயாடு லோஹர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'மஞ்சணத்தி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதனை 'இசைஞானி' இளையராஜா பாரம்பரிய முறைப்படி 'கிளாப்' அடித்து, தொடங்கி வைத்தார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மஞ்சணத்தி' திரைப்படத்தில் பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, கதிர், விது உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைக்கிறார். 

மண் மணம் கமழும் எளிய மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை நவ்வி ஸ்டுடியோஸ், ஸ்கந்தா பிக்சர்ஸ்,  பார்ச்சூன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ், சுஷாந்த் பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 

இதனை திவ்யா மாரி செல்வராஜ் வழங்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

இதனை 'இசைஞானி' இளையராஜா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜா, பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோரின் கூட்டணியில் உருவாவதால் இதற்கான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39