25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில் ‘புனித தோமையார் வாசாப்பு’!

07 Sep, 2026 | 04:21 PM
image

25 ஆண்டுகளின் பின்னர்   முருங்கன் கல்நாட்டி ஆலய சபை மற்றும் கிராம மக்கள்  இணைந்து வழங்கிய 'புனித தோமையார் வாசாப்பு' நாடகம்  நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (6) மாலை முதல் திங்கள் (7) அதிகாலை வரை சிறப்பாக இடம்பெற்றது.

சமூக ஒற்றுமையை ஏற்படுத்துதல்,பெரியவர்களுக்கு மதிப்பலித்தல்,கடமை,கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு போன்றவற்றுடன் சமூகத்தை வளர்த்தல்,பொது நலன் முன்நிறுத்தப்படல்,ஆற்றல்களையும், திறமைகளையும் வெளிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக குறித்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை,கௌரவ விருந்தினர்களாக முருங்கன் மெதடிஸ்த போதகர் அருட்பணி நித்திய ஜீவன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன்,நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் அன்று ராஜன்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,வைத்திய கலாநிதி ஒஸ்மன் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கிராம மக்கள் அயல் கிராம மக்கள் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் குறித்த புனித தோமையார் வாசாப்பு'   நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புனித தோமையார் வாசாப்பு'  நாடகம்   கத்தோலிக்க பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றாகும்.  புனித தோமையாரின் வரலாறு மற்றும் அவரின் விசுவாசப் பணிகளை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43
news-image

திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல்...

2026-10-04 10:10:01