இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Image result for இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் virakesari

மன்னார் நீதவான் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், படகொன்றும் தலைமன்னார் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைதான மீனவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மன்னார் கடற்றொழில் திணைக்களத்திடம் இம்மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.