ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு புரோஸ்டேட் எனும் பிரத்யேக சுரப்பி பகுதியில் வீக்க பாதிப்பு ஏற்பட்டு, அதனால் சிறுநீர் வெளியேற்றுவதில் விவரிக்க இயலாத அசௌகரியங்கள் உண்டாகும். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது ரெஸூம் சிகிச்சை எனும் நவீன சத்திர சிகிச்சையற்ற சிகிச்சையை மேற்கொண்டு, முழுமையான நிவாரணம் வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ,இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், கழிக்கும் போது விவரிக்க இயலாத அசௌகரியம், சிறுநீரில் குருதி கலந்து வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று அவர்களுடைய புரோஸ்டேட் எனும் சுரப்பிகளில் ஏதேனும் வீக்க பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதனை அதற்குரிய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தகைய பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு ரெஸூம் சிகிச்சை எனப்படும் நவீன சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது. சிறுநீர் குழாய் மீது இயல்பான அளவைவிட கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தும் புரோஸ்டேட் சுரப்பிகளின் திசுக்களை அங்கிருந்து அகற்றுவதற்காக ஒரு நீராவியை கொண்டு பாவிக்கப்படும் சிகிச்சையாகும்.
இத்தகைய சிகிச்சையின் போது வைத்திய நிபுணர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீராவியை கொண்டு,பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிக்கப்பட்ட புரோஸ்டேட் திசு முழுவதும் ஒன்பது வினாடிகள் வரை செலுத்தப்படுகிறது.
இதில் உள்ள வெப்பம் மற்றும் அதில் சேமிக்கப்பட்டிருக்கும் ஆற்றல் ஆகியவை தேவையில்லாத திசுக்களை அழித்து, சிறுநீர் குழாய் மீதான அழுத்தத்தை சீர்படுத்துகிறது.
இத்தகைய தருணத்தில் உங்களுடைய புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தின் அளவைப் பொறுத்து உங்களுக்கு தேவையான சிகிச்சையின் தன்மையை வைத்தியர்கள் தீர்மானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து விரிவான புரோஸ்டேட் மீண்டும் இயல்பு நிலையை அடைகிறது.
பெரும்பாலானவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்ட பதினைந்து நாட்களுக்குள் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெற தொடங்குகிறார்கள். சிலருக்கு மட்டும் இவை பலனளிக்க மூன்று மாதங்கள் ஆகிறது.
இத்தகைய சிகிச்சை பெறுவதற்கு முன்பும், பின்பும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து அவர் பரிந்துரைக்கும் அறிவுரைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
வைத்தியர் அனுராக்
தொகுப்பு அனுஷா



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM