சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ் அணிக்கு இன்னும் ஒரு வேற்றி தேவை; நியூ யங்ஸை இன்று சந்திக்கிறது

07 Sep, 2026 | 03:29 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் சுப்பர் லீக்  சம்பியன்ஷிப்பின் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கான தகுதியைப் பெற சீ ஹோக்ஸ் அணிக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

இந் நிலையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மிக முக்கிய சுப்பர் லீக் போட்டியில் வென்னப்புவை நியூ யங்ஸ் அணியை சீ ஹோக்ஸ் அணி எதிர்த்தாடவுள்ளது.

அப்கன்ட்றி லயன்ஸ், றினோன், கலம்போ எவ்சி., ரெட்ஸ் ஸ்டார் ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ள நிலையில் சீ ஹோக்ஸ் அணி இன்று வெற்றிபெற்றால் ஐந்தாவது அணியாக இந்தப் பட்டியலில் இணைந்துகொள்ளும்.

சீ ஹோக்ஸ் அணி 3 வெற்றிகள், 3 வெற்றி தோல்வியற்ற முடிவுகள், ஒரு தோல்வி என்ற பெறுகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று தற்போது 5ஆவது இடத்தில் இருக்கிறது.

நியூ யங்ஸ் அணி ஒரு வெற்றி, 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள், 4 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 5  புள்ளிகளைப்   பெற்று 8ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளில் சீ ஹோக்ஸ் அணி பலம் வாய்ந்ததாக இருப்பதால் போட்டி முடிவு அவ்வணிக்கு சாதகமாக அமையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் அபராம்; இலங்கைக்கு...

2026-10-13 23:00:18
news-image

இலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-10-13 20:51:46
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட பங்களாதேஷ் -...

2026-10-13 21:20:14
news-image

ரென்ஷோ துடுப்பாட்டத்திலும் ஹேஸ்ல்வூட் பந்துவீச்சிலும் அசத்தல்;...

2026-10-13 19:30:55
news-image

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று;...

2026-10-13 16:26:49
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை...

2026-10-13 13:20:47
news-image

இடியுடன் கூடிய கடும் மழையினால் தடைப்பட்டது...

2026-10-12 23:09:25
news-image

சீ ஹோக்ஸ் - கலம்போ எவ்சி...

2026-10-12 13:50:03
news-image

உலக மனநல தினம்: ‘ஆன் மை...

2026-10-12 04:09:26
news-image

இரண்டாவது சர்வதேச ரி20இல் இலங்கையை துவம்சம்...

2026-10-11 22:49:53
news-image

புளூ ஸ்டாரின் கடும் சவாலுக்கு மத்தியில்...

2026-10-11 21:02:58
news-image

றினோன் கழகத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது...

2026-10-11 16:06:32